ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அரபு மொழி திரைப்படங்கள்
சர்வதேச திரைப்பட விருதான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இவ்வாண்டு 3 அரபு மொழி திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.அவற்றில் 2 திரைப்படங்கள் அரபுலக எழுச்சியின் கதையை கூறுவதாகும்.ஒரு திரைப்படம்ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் அநியாயத்தை சித்தரிக்கிறது.
மிகச்சிற வெளிநாட்டு மொழித்திரைப்படத்திற்கான போட்டியில் ஃபலஸ்தீன் திரைப்படமான ‘உமர்’ இடம் பெற்றுள்ளது.இஸ்ரேல் ராணுவத்தால் கைதுச் செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஃபலஸ்தீன் குடிமகன் உமரின் கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.
இஸ்ரேல் ராணுவ வீரனை கொலைச் செய்த ஃபலஸ்தீனி ஒருவரை கொலைச் செய்தால் விடுவிப்போம் என்று இஸ்ரேல் ராணுவம் உமரிடம் பேரம் பேசுகிறது.ஆனால், அதற்கு உமர் மறுக்கிறார்.இதனைத்தொடர்ந்து அவரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்கிறது.டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றது.ஹானி அபூ அஸத் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
2011-ஆம் ஆண்டு அரபுலக எழுச்சியைத் தொடர்ந்து எகிப்தில் அரங்கேறிய எழுச்சிப் போராட்டங்களின் கதையை கூறும் ‘த ஸ்கொயர்’ என்ற எகிப்திய திரைப்படம் தான் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்றொரு அரபு மொழி
திரைப்படமாகும்.
டாக்குமெண்டர் ஃபிக்சர் பிரிவில் இத்திரைப்படம் போட்டியிடுகிறது.எகிப்தில் தணிக்கைத் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இத்திரைப்படம், இதுவரை அந்நாட்டில் திரையிடப்படவில்லை.கடந்த 3 ஆண்டுகளாக எகிப்தில் நீடிக்கும் பிரச்சனைகளையும், சிக்கலான சூழல்களையும் விவரிக்கும் ’த ஸ்கொயர்’ திரைப்படத்தை ஜீஹான் நுஜைம் இயக்கியுள்ளார்.
‘கராமா ஹாஸ் நோ வால்ஸ்’ என்ற இன்னொரு அரபு மொழி திரைப்படமும் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் உள்ளது.யெமன் நாட்டில் உருவான புரட்சிப்போராட்டத்தின் போது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி அரசு ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமே ’கராமா ஹாஸ் நோ வால்ஸ்’ .யெமன் – ஸ்காட்லாந்து திரைப்பட தயாரிப்பாளரான ஸாரா இஸ்ஹாக் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.மார்ச் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படும். tho
-
Post a Comment