சிங்கள இனத்தை ஒடுக்க, சிங்கள பெண்கள் மணக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு..!
சிங்கள இனத்தை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட சதி முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல், அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் சிங்கள யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்பபு வழங்கி குறித்த இனத்தவர்கள், சிங்கள யுவதிகளை மணக்கின்றனர்.
இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சிங்கள யுவதிகளின் கலாச்சாரம், இனத்துவ அடையாளம் போன்ற அனைத்துமே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது.
குறித்த இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிங்கள யுவதிகளை மணக்கின்றார். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் குறித்த இன கலாச்சாரத்தின் அடிப்படையில் வளர்கின்றனர்.
இரண்டாம் இராஜசிங்க மன்னன் ஆட்சி செய்த போது வியாபாரிகளாக நாட்டுக்குள் புகுந்து சிங்களப் பெண்களை மணந்து புதிய இனமொன்றை உருவாக்கியதனைப் போன்றே, சிங்களப் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கி தங்களது இனத்தை வலுப்படுத்திக் கொள்கின்றனர்.
இனமொன்றை உருவாக்கவும் அழிக்கவும் கூடிய ஆற்றல் பெண்களிடம் காணப்படுகின்றது. எனவே இது குறித்து பெண்களும் பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாடு முழுவதிலும் திட்டமிட்ட வகையில் சிங்கள இனத்தை ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
In that corner; Sinhala clan started from a women (she is not sinhala at that time) in Sri Lanka...........Refer to Mahawamsa
ReplyDeleteசிங்களவர்களாக இருந்து கொண்டே குறித்த மதத்திலே மதக்கடமைகளை செய்ய முடியும் என்று அந்த சிங்கள பத்திரிகைக்குச்சொல்லவும்.
ReplyDeleteIvarhal than antha sinhalap penkela? Pavam antha kuriththa inam!
ReplyDelete