Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் உடைந்து விட்டதா..?

(தந்திமகன்)

கிழக்கின் முகவெத்திலை என்கிற கல்முனை மாநகரின் முன்னாள் மேயர், இந்நாள் பிரதிமேயர் என்கிற கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கல்முனை மாநகரின் மேயராக அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியிருந்தார். அவர் பதவியேற்று இரண்டாண்டுகளின் பின்னர் பதவியை தந்தாகவேண்டுமென கணவான் அரசியல் செய்கின்ற ஸ்ரீலமுகா. கட்சியின் தலைமைப்பீடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் மேயர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு புதிய மேயரான முகாவின் முக்கிய உறுப்பினரும், கல்முனையின் பிரதி மேயராக இருந்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இது பிழையான  நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. 'தன்னுடைய பிரதி மேயர் பதவிக்கான சரியான முகவரியோ, காரியாலயமோ, பதவி உறுதிப்படுத்தப்படவோ இன்றி தன்னை கட்சி மிகவும் கேவலமாக நடாத்தியது போன்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி தன்னுடைய கட்சியின் தலைமையோடு முரண்பட்டு பதவியையும் தூக்கி வீசியெறிந்து, முகாவின் பிரதான எதிரிக்கட்சியான தேசிய காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார் சிறாஸ் அவர்கள்.

இந்த ஐக்கியான சந்திப்பு கடந்த வாரத்தில் சாய்ந்தமருதில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாபெரும் மக்கள் ஒன்றுகூடலில் 'சாய்ந்தமருத்துக்கான தனியான ஒரு உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையாக' முன்வைக்கப்பட்டு அமைச்சர் அதாஉல்லா முன்னிலையில் சிறாஸ் மீராசாகிபு ஐக்கியமானார். இந்த ஐக்கியம் இன்று அமைச்சர் அதாஉல்லாவின் கட்சிக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் கிடைத்த மிகப்பெரியதோர் பலம். ஆனால் அது ஸ்ரீலமுகாவினருக்கு பலத்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று இலங்கை முஸ்லிம்களின் முக்கியமான கட்சியாக கருதப்படுகின்ற ஸ்ரீலமுகா கட்சி எதிர்காலத்தில் பல்வேறு உடைவுகளுக்கு வித்திடும் என்கிற கருத்தினை கடந்த வாரம் இதே பகுதியில் 'தேர்தலின்பின்னர் திசைமாறுமா முஸ்லிம்காங்கிரஸ்?' எனும் தலைப்பில் அரசியல் கட்டுரை ஒன்றின் ஊடாக இவ்விடயம் என்னால் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்த மக்கள் மத்தியில் முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபு குறிப்பிடுகையில் 'எமது மக்களின் முப்பத்தைந்து வருடக் கனவை நனவாக்கித் தருவதோடு, எமது பரம்பரை நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எம்மை நாமே ஆளுகின்ற உள்ளுராட்சி மன்றமொன்றை உருவாக்கித் தாருங்கள். காலம் உள்ளவரை நீங்கள் செய்து தரும் இவ்வரலாற்றுப் பணிக்காக நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம். இந்த மக்களுக்காக எனது பதவி பட்டம் அந்தஸ்த்து அனைத்தையும் உதறித்தள்ளி விட்டு உங்களோடு கைகோர்த்து இணைந்துள்ளேன். எமக்கான பிரதேச சபையொன்றை உருவாக்கித்தாருங்கள் அந்த நன்றிக்கடனுக்காக இம்மக்கள் எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள்' என்றும் தெரிவித்தார்.

மேலும் சிறாஸ் குறிப்;பிடுகையில் 'எமது பிரதேசத்திற்கென தனியான ஒரு பிரதேச சபை உருவாகுவதை தடுக்கும் இப்பிராந்தியத்தில் உள்ள ஒரு சில அரசியல் வாதிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன். இந்த மக்களுக்கு தனியான பிரதேச சபை தேவை இல்லை என்று கொக்கரிக்கின்றனர். இந்த எதிர்ப்பு அரசியல்வாதிகள் எந்தத் தடையை ஏற்படுத்தினாலும் எனது இறுதி மூச்சு உள்ள வரை எமது மக்களுக்காக செயற்பட்டு நாங்கள் எண்ணியதை இறைவன் அருளாள் சாதிப்பேன். எனது மேயர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டியபோது, நான் பதவி ஆசை பிடித்து பதவி துறக்க முடியாதென அடம்பிடிக்கவில்லை. சற்று அவகாசம் கேட்டேன். நாங்கள் ஆரம்பித்த எத்தனையோ வேலைகள் இடை நடுவில் இருக்கின்றன. அதனை நிறைவு செய்ய சிறிது அவகாசம் தாருங்கள் என்று கேட்டேன் அதற்கு அத்தலைமை செவி சாய்க்கவில்லை. பதவியினை துறக்க வேண்டும் என்று ஒரு பிடியாய் நின்றது முகாவின் கட்சித் தலைமை. இறுதியில் பதவி துறப்பதற்காக வசியக்காரர்களையும் என்மீது சாட்டி அந்தத் தலைமை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஈற்றில் பதவியைத் துச்சமென நினைத்து இராஜினாமாச் செய்து விட்டு வந்தேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'கண்களைக் கட்டி பாலைவத்தில் வீசி எறியப்பட்ட நான் விழித்துப் பார்த்த போது அந்த வழியாக வந்த குதிரை மீது ஏறித்தான் நான் உயிர் தப்பிக்க வேண்டியதாயிற்று. அந்த வழியாக குதிரை (அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியின் சின்னம் குதிரை) வராமல் விட்டிருந்தால் இன்று உங்கள் முன்னால் என்னால் பேச முடியாமல் போயிருக்கும். எனது தாகத்திற்கு தண்ணீர் புகட்ட வந்தவர்தான் அமைச்சர் அதாஉல்லா. அவர் சொல்வதைத்தான் செய்பவர் அவர் பக்கம் இணைவதால் எமது மக்கள் நிச்சயம் நன்மை பெறுவார்கள் பாரிய அபிவிருத்திகளை அடைந்து கொள்வார்கள் என்றும் சிறாஸ்மீராசாகிவு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாகாணசபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா உரையாற்றுகையில் 'எந்த பிரதேசமாகட்டும், அல்லது எந்த ஊராகட்டும் அந்தப் பிரதேசத்திற்கென அரசியல் தலைமைகள் இருக்க வேண்டும். அங்கு அரசியல் பலம் இருக்க வேண்டும். அவர்களது பிரச்சினைகளை அவர்களாகத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கான அபிவிருத்திகளை அவர்களாகச் செய்ய வேண்டும். சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கை, புதிதான ஒன்றல்ல. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு என்னை வந்து சந்தித்தவர்களிடம் அப்போது நான் மிகவும் தெளிவாக் கூறியிருந்தேன். எந்தவொரு சமூகத்தினருக்கும் எந்தவொரு பிரதேசத்திற்கும் பாதிப்புகள் ஏற்படாதவாறு எவருக்கும் அநீதியிழைக்கப்படாதவாறு சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதையே இன்றும் சொல்கிறேன். அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டேன். நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள்.

கட்சித் தலைமைகள் சமூகத்தின் நலனுக்காக செயற்பட வேண்டும். தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவென காலத்திற்குக் காலம் கதைகள் சொல்லித் திரிய வேண்டியதில்லை. பிரச்சினைகள் என்பது காலத்திற்குக் காலம் வருவது சகஜம். அந்தப் பிரச்சினைகளை சமூகத்தில் பூதாகரமாக்கி தேர்தற் கால வாக்கு வேட்டைக்கான சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளக் கூடாது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது மஹிந்தவா? பள்ளிவாசலா என மக்கள் மத்தியில் உணர்ச்சியை ஊட்டி விட்டு பின்னர் மஹிந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, இன்று வேறொரு கதையைக் கூறிக் கொண்டு மக்கள் முன் வாக்குக் கேட்டுச் செல்கின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது சமூகத்திற்கு ஏற்பட்ட எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கின்றது அல்லது அக்கட்சி எமது மக்களுக்காக செய்த அபிவிருத்திதான் என்ன? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்முனை மாநகரின் முன்னாள் மேயர் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டது போன்றுதான் நாமும் கட்சியிலிருந்து அன்று வெளியேறினோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உண்மையான கட்சிக் காரர்கள் யாருமில்லை. கட்சியின் செயலாளர் ஹசன் அலி மாத்திரம்தான் கட்சிக் காரராக இருக்கின்றார். அவரும் எதற்காக இதுவரை இருக்கிறார் என்று தெரியவில்லை. இரண்டில் ஒன்றைப் பார்த்து விட்டு வெளியேறலாம் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்போலும்' எனவும் அமைச்சர் அதாஉல்லா தெரிவித்தார்.

கல்முனை பிரதிமேயரும், கலாநிதி சிறாஸ் அவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதன் காரணமாக கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்குமான ஊடல்கள் பலத்த எதிர்ப்பலைகளைத் தோற்றுவிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. சாய்ந்தமருதா? கல்முனையா? என்கிற வாய்ச்சவாடல்களை ஆளும் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத நோக்குகளை ஏற்படுத்தி சாதாரண பொதுமக்களை பகடைக்காய்களாக பாவித்து கறிவேப்பிலைபோன்று தூக்கிவீசப்படுகின்ற நிலைமைய ஏற்படுத்துகின்ற கட்சி அவதாரங்களை மக்கள் இனங்காணவேண்டும். ஒரு கால கட்டத்தில் சாய்ந்தமருதுக்கான அரசியல் அதிகாரத்தை சரியான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்திருந்தால் இன்று கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்காது. சரியான முடிவினை சரியான நேரத்தில் எடுப்பதாகக் கூறிக் கொள்ளும் இக்கட்சி இன்று தேர்தல் காலத்தில் ஒரு நாடககும், மற்றொரு நேரத்தில் மற்றொரு நாடகமும் ஆடுவதாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கபீர்ஹாசிம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஊர்களை பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக ஊருக்குள் பல தலைவர்களை உருவாக்கி ஊருக்குள்ளே பல்வேறு வெட்டுக் குத்துக்களை கடந்தகாலத்திலிருந்தே ஏற்படுத்திக் கொண்டு வருகின்ற முகாவினர் இன்று பிரதேசத்தை கூறுபோடுகின்ற ஒருநிலைமைக்குள் தள்ளிவிடப்பட்டிருப்பதானது எதிர்காலத்தல் கல்முனை மாநகரத்தைக் கட்டிக்காத்த தனித்துவத்தை இழந்து பரிதவிக்கப்;போகின்ற ஒரு பிற்போக்கு நிலைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஊர்களற்ற, பிரதேச வேறுபாடுகளை அறுத்தெறிந்த ஸ்ரீலமுகா கட்சி சமூகத்தைப் பிரித்து, ஊர்களைப் பிரித்து, பிரதேசத்தைப் பிரித்து, கட்சிகளைப் பிரித்து, வாக்குகளைப் பிரித்து இறுதியில் எம்மை யாரோ ஆளப்போகின்ற ஒரு இழிநிலைக்குள் தள்ளப்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது என்கின்றனர் சமாதானத்தை விரும்புகின்ற புத்திஜீவிகள்.

தனியான உள்ளுராட்சி மன்றத்தை பெறுவது என்பது அரசியல்பலம் ஒன்று இருந்தால் சாதித்துவிடலாம். ஆனால் இதற்குப் பின்;னர் ஏற்படப்போகின்ற நிலைமைகளையும் புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது சந்ததிகள் நிம்மதியாக வாழ வழியேற்படும். அதனைத்தான் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மிக நுணுக்கமான முறையில் எச்சமூகத்திற்கும், எந்த ஊருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை உருவாக்கப்படும் என்கிற தந்திரோபாயத்தை அந்த மக்களின்முன்னே, முன்வைத்திருந்தமை உண்மையிலேயே முஸ்லிம்கட்சிகளின் தலைவர்களுள் அமைச்சர் அதாஉல்லாவின் நித்தியபார்வையின் உத்வேகமும், விவேகமும் தெரிகின்றது என்றே கூறலாம்.

இந்த விடயத்தின் ஊடாக ஒரு விடயத்தை மாத்திரம் கூறிக் கொள்ளலாம். தியாகத்திற்கு மத்தியில் முஸ்லிம் கள் இந்நாட்டில் சமாதானப்பிரியர்களாகவும், இனஇணைப்பாளர்களாகவும், ஒற்றுமைமிக்க சமூகமாகவும் வாழவேண்டுமென நினைத்து, முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலமுகா கட்சி இன்று பல்வேறு உடைவுகளுக்குள்ளாகி, இன்று முஸ்லிம்கள் தனித்துவமாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் வேற்றுமைப்படுத்தி, பிரிவினை வாதத்தினை மேற்கொண்டு வருகின்றதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இதற்குரியவர்களாக அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்களை புடம்போடுகின்றார்கள். இந்த நிலைமை ஒழிக்கப்படவேண்டும்.

அமைச்சர் அதஉல்லாவுடன் சிராஸ் மீராசாகிபு சங்கமித்து உள்வாங்கப்படுவதன் பின்னணயில்; உடனடியாகவே சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் அவசர அவசராக கிழக்கு மாகாண சபை உறுப்;பினர் ஏ.எம். ஜெமீல் தலைமையில் ஒன்றுகூடி சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர். அத்தீர்மானங்களுள் முக்கியமாக 'சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை உருவாக்கும் நடவடிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் துரிதப்படுத்துதல், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலய அலுவலகத்தை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தல், கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவை மாதாந்தம் கூட்டி கட்சி நடவடிக்கைகள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் பற்றி குறித்து கலந்துரையாடுதல்' போன்றனவாகும்.

இதனை சிராஸ்மீராசாகிபு கட்சிக்குள் இருக்கின்றபோது அவருடன் இணைந்து செயற்படமுடியாமல்போனது ஏன்? இன்று இந்த உறுதிமொழியை எடுத்திருப்பதன் மர்மம் என்ன? இதைப்போல எத்தனையோ உறுதிமொழிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள பல முஸ்லிம் ஊர்களில் காலாவாதியாகிய நிலைமையும் உண்டு. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகச் செல்கின்றது. ஸ்ரீலமுகா கட்சிக்குள் மக்கள் ஆதரவு குறைந்து செல்கின்றது. அதேவேளை கட்சிக்குள் உடைவுகளும் நீண்டுகொண்டே செல்கின்றன. சரியான பாதையில் கட்சியை ஓட்டமுடியாமல் போனால் கட்சிக்குள்ளே இருக்கின்றவர்கள் தங்களுடைய நிலைமைகளை சுதாகரித்துக் கொள்ள வேற்றுக்கட்சிகளில் தாவவேண்டிய நிலைமையினை முகா ஏற்படுத்துவதிலிருந்து தப்பிக்கவேண்டும். இனியும் கட்சி உடைந்திடாமல் தலைமைப்பீடம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை சிறாஸ்மீராசாகிபின் ஊடாக படிப்பினை பெறவேண்டுமென வாக்களித்த மக்களின் கோருகின்றனர்.

3 comments:

  1. saainthamaruthuku thaniyaana pirathesa sapayai enna vilai koduthum athaavullah seithumudikka muyarchi seivaar. Adutha paaralumanra therthalinpothu, Avarathu sonntha oorill sarikinra vaakukalai sainthamaruthu vaakukalaal nirappuvar. Aaha ooruku pirathesa sapayum aayitru avaruku aasanumum uruthiyaayitru.
    Ithupoka.. ivar Maruthamunaikkum oru thaniyaana pirathesa sapai amaya vendum ennra unarvai ooti kadantha maakaana sapai therthalil vaakku kettar athai ippothaiku maranthuvidalam.. 2500 vaakukalai vida 5000 vaakukal avarukku makilchi tharum... vaalka pirathesa vaatham valarka athaavulla vairu....

    ReplyDelete
  2. இந்த பிரதேசத்தின் மிகப் பெரும் பலம் இவ்விரு ஊர்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. தனிப்பட்ட அரசியல் வாதிகளின் சுயநலத்திற்காக பிரதேசவாசம் பேசி எதிர்கால சந்ததிகளின் அரசியல் பலத்தை சிதறடிக்க, இவ்விரு ஊர் மக்களும் புத்தி ஜீவிகளும் இடம் கொடுக்காது, இந்த பிரதேச வாதம் பேசும் சுயநல அரசியல் வாதிகளை புறம் தள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. It seems that Jaffna Muslim doesn’t have any political history. Mr.Siras is not a key politician and he didn’t earn bulk amount of vote as a result of his influence among public. But the reality is that the people of Sainthemaruthu coveted to be the Mayor of Kalmuani municipal from Sainthemaruthu only. This is the truth. It was result of usual ethnic hatred of Sainthemaruthu people on Kalmunaikudy’s development and people. The political jumping of Mr.siras will never make quite an impact on Muslim Congress’s victory or vote bank. On last election time, he might have bought some money minded people who are usually behind the money. Some time, these people only may go behind him because they never are steady politically. These people are never included in Muslim congress vote bank. Sainthemaruthu people’s hatred on Kalmunai is representation of stupidness because they should realize that they were addressless a few decades ago and were using the name of Kalmunai for introducing them to expatriate. The Fame, reputation, popularity and status should be attained naturally. We shouldn’t snatch it from other or we shouldn’t covet it. When time comes, we can get it. Better Jaffna Muslim not is worrying too much thinking of Mr.Siras. The people know very well who are with Athaullah . Allah Always makes Muslim Congress identified the double-faced and double-tongued person. A crystal clear thing that any social minded person never will join with Athaullah and his political party. We know who are behind him and their under the table dealing to betray Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.