Header Ads



அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

(ஏ.ஜி.ஏ.கபூர்)

அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (04.02.2014) செவ்வாய்க்கிழமை வித்தியாலய அதிபர் எஸ்.எம்.ஆதம்லெவ்வை தலைமையில் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசீம் அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ்,அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச்.பௌஸ், எம்.ஏ.அபூத்தாஹிர்மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முல்லை – (நீலம்), அல்லி- (பச்சை), மல்லிகை – (மஞ்சள்) ஆகிய முன்று இல்லங்களையும் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மாணவ, மாணவிகள் சுவட்டு , மைதான போட்டிகளிலும், உடற் பயிற்சி, வினோத உடை, கிடுகு இழைத்தல், தேங்காய் துருவல், யானைக்குக் கண் வைத்தல் பணிஸ் சாப்பிடல் முதலிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் சம்பியனாக மல்லிகை (மஞ்சள்)இல்லம் ( 96 புள்ளிகள்) பெற்றதோடு இணைச் சம்பியனாக அல்லி (பச்சை) இல்லமும் (71 புள்ளிகள்); முல்லை – (நீலம்) இல்லம்; (58புள்ளிகள்) பெற்று முன்றாம் இடத்தையும் பெற்றது.

இல்ல அலங்காரப் போட்டியில் 01ம் இடம் அல்லி- (பச்சை) இல்லமும்,02ம் இடத்தை முல்லை இல்லமும் 03ம் இடம் மல்லிகை இல்லமும் பெற்றதோடு, உடற் பயிற்சி போட்டியில் முல்லை – (நீலம்) இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றதோடு மல்லிகை-(மஞ்சள்), முல்லை (நீலம்) என்பன 02ம், 03ம் இடங்களைப் பெற்றன. இளதற்கான விருதினை இல்லப் பொறுப்பாசிரியர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி விருதுகள்,, கிண்ணங்கள் மற்றும்  சான்றிதழ்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர் அவர்கள் வழங்கி வைத்தார்.




No comments

Powered by Blogger.