பெண் மீது அசிட் வீசியவரின் கண்ணை தோண்டி எடுக்கவேண்டும் - ஈரான் நீதிமன்றம் தீர்ப்பு
ஈரானில் இளம் பெண் ஒருவர் மீது அசிட் வீசி கண்ணை குருடாக்கிய இளைஞனின் கண்ணை தோண்டி எடுக்கும்படி ஈரான் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி குறித்த நபரின் வலது காது மற்றும் மூக்கு ஆகியவையும் தண்டனையாக வெட்டி அகற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக ஈரானின் எதிர்க் கட்சியான ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. அசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கண் பார்வை இழந்திருப்பதோடு வலது காதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய நபர் கடந்த ஒக்டோபரில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தார். இதில் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் பாகங்களை அகற்றும் தீர்ப்பை ஈரான் உயர் நீதிமன்றம் நியாயப்படுத்துவதோடு அது நாட்டின் நீதித்துறையின் அங்கமாகும் என்று மேற்படி தேசிய கவுன்சில் குறிப்பிடுகிறது.
கடந்த மாதம் ஈரானில் ஒருவருக்கு ஒருகால் மற்றும் ஒரு கையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகமான மஹ்ர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு 95 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
Post a Comment