சவூதி அரேபிய பெண்ணுக்கு, விருது வழங்கி கௌரவித்த ஒபாமா
ஒரு நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் ரியாத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்தித்து பேசினார்.
நேற்றிரவு இங்கு ஓய்வெடுத்த ஒபாமா, சவூதியில் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து பேசினார்.
கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப், இந்த ஆண்டுக்கான அமெரிக்க அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.
இஸ்லாத்தில் இல்லாத உரிமைகளையா இவர்கள் போர்க்கொடி தூக்கி பெறப்போகிறார்கள்?உண்மை முஸ்லிம்களாக வாழுங்கள்.ஒன்று நீங்கள் சரியான முஸ்லிம் இல்லை,அல்லது உங்களது ஆண்கள்.யார் யாரை குறைகாணிடினும்,அடிமைத்தன வாழ்வை ஒருபோது இஸ்லாம் அனுமதிக்கவில்லை.அதனால்தான் விவாகரத்தை அனுமதிக்கியறது,இருப்பினும் அதுவே இறைவனுக்கு மிக வெறுப்பான ஆனால் அனுமதித்த காரியம்.
ReplyDeleteஇந்த பெண் நடத்திய நாடகம்,அதுவே சவுதி அரசை சாடும் சம்பந்தப்படுத்தும் போறாக இருந்திருந்தால்,இவரை இங்கு ஒபாமாவும்கூட கண்டிருக்க மாட்டார்,எங்கயோ கம்பிகளுக்குப்பினால் இருந்திருப்பார்.