Header Ads



தேர்தல் முடிவுகள் குறித்து ஜனாதிபதி மஹிந்தவின் கருத்து..!


மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷச தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இதனையே தெளிவுபடுத்துகின்றது.

எந்தவொரு சக்தியினாலும் தேசிய நோக்கங்களை தோற்கடிக்க முடியாது. சர்வதேச அழுத்தங்களுக்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பது மாகாணசபை தேர்தல்களின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏனைய எல்லாவற்றையும் விட நாட்டு மக்களின் தேவைகளே முதன்மையானது.

தேசத்தின் தேவைகளை தோற்கடிக்கச் செய்ய எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாணத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.