Header Ads



வடக்குகிழக்கில் எந்த முஸ்லிமும் சித்தியடையாத இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சை

(நவாஸ் சௌபி)

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III  வகுப்பிற்கு ஆட்சேர்ப்பதற்கான மேற்படி பரீட்சைக்கு  கடந்த 2013 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இதன்படி மேற்படி பரீட்சையானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது. அதற்கமைய கடந்த வாரம் புதன்கிழமை முதல் இதற்கான பரீட்சை முடிவுகள் பரீட்சாத்திகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. 

மேற்படி பரீட்சையானது திறந்த பரீட்சை, மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை, சிரேஷ்ட மற்றும் தமைமை அடிப்படையிலான பரீட்சை என்று மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் எந்த முஸ்லிம்களும் சித்தியடையாத ஒரு முடிவு பெறப்பட்டிருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கான பாடங்களாக 

கிரகித்தல்- Comprehension 
நுண்ணறிவு - Intelligence Test
கல்வி நிர்வாகம் தொடர்பான சம்பவக் கற்கை - Case Study on Education Administration 

எனும் 3 பாடங்கள் நடைபெற்றன இதில் ஒவ்வொரு பாடங்களிலும் 40கும் மேற்பட்ட புள்ளிகள் பெறுவது சித்தியடைவதற்கான தகைமையாகும் அதிலிருந்து ஆளனியின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தப் புள்ளியின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெறும்.

வழமைக்கு மாற்றமாக போட்டிப் பரீட்சை ஒன்றில் நுண்ணறிவு பரீட்சைத் தாள் மிகவும் கடினமாக நடைபெற்ற ஒரு பரீட்சையாக மேற்படி மட்டு;ப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அமைந்திருந்தது என்ற விமர்சனத்தை நாடு முழுவதிலுமுள்ள பரீட்சாத்திகள குறிப்பிட்டிருந்தனர்.

அப்போது அப்பரீட்சையை எழுதியவன் என்றவகையில் நானும் எனது கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். 'இம்முறை இப் பேப்பரை வாசிக்கும்படிதான் தந்திருக்கிறார்கள் அடுத்த பரீட்சையில்தான் இதனை செய்யும்படி தருவார்களாக்கும்'  என்றேன் அதற்கு அருகிலிருந்த நண்பர் 'வாசிப்பதற்கும் தந்த நேரம் போதாதே இறுதிக் கேள்விகள் இரண்டை நான் வாசிக்கவே இல்லை;' என்றார்.

இது சிரிப்பதற்கான விடயம் மட்டுமல்ல சிந்திப்பதற்குமான ஒரு விடயமாக இருக்கின்றது. ஏனென்றால் இப்பரீட்சை முடிவுகள் அந்த சிந்தனையை எமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதிகமானவர்கள் இப்பரீட்சையின் நுண்ணறிவுப் பத்திரத்தில் 40 க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றிருக்கின்றனர் அதே நேரம் ஏனைய இரண்டுபாடங்களிலும் 40 கும் அதிகாமான புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி இலங்கை முழுவதிலிமிருந்து 160 பரீட்சாத்திகள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் அதற்கான பெயர் பட்டியலை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்க முடிந்தது. 

இதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எந்த முஸ்லிம்களின் பெயரும் இருக்கவில்லை இலங்கையில் தோற்றிய முழுமுஸ்லிம்களுக்காகவும் 5 முஸ்லிம்களின் பெயர்கள் நேர்முகப்பரீட்சைப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூம் சார்பாக அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்களால் எமது சமூகம் ஈடேற்றம் பெறட்டும். அவர்களின் பெயர் விபரம் வருமாறு.

ENGLISH 

1. Mrs. NS. Ismail 185/9, Galagedara Road, Katugastota 
2. Mr. IAM. Afsan 17, Vidyala Mawatha, Namadagahawatta, Galewela
3. Mrs. FR. Farook Odayar 7, Mosque Road, Madawala Bazaar

COMMERCE

4. Mrs. GFSA. Raheem 200, uguressapitiya, Katugastota  

IT 

5. Mr. MMM. Imran 220/A, Nidahas patumaga, Madige, Galagedara 

ஆகியோர் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியமாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இவர்கள் 5 பேரும் இருக்கின்றார்கள். அங்கு பரீட்சைக்கான வழிகாட்டுதல்களும் கருத்தரங்குகளும் சிறப்பாக நடைபெற்று அவர்கள் முறையாக வழிநடத்தப்பட்டிருப்பதனை இதன் மூலம் புரிய முடிகிறது. 

மேலும் 160 பேரில் தமிழ் சமூகத்தினரும் 3-5 இடைப்பட்டவர்கள்தான் இருக்கின்றார்கள் ஆக 10 தமிழ் மொழி மூலமானவர்கள் இதில் நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவாக ஏனைய 150 பேரும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதன்படி எதிர்காலங்களில் வடக்கு கிழக்குப் பிரதேச கல்வி நிர்வாக சேவைப் பணிப்பாளர்களாக சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காணப்படுவார்கள் என்கின்ற எதிர்வுகூறலையும் இதன் மூலம் கூறக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம் சமூகம் இவ்வாறான பரீட்சைகளில் சித்தியடைவதற்கு திட்டமிடாமல் இருக்கின்றோமா? அல்லது முஸ்லிம்கள் இப்பரீட்சைகளில் சித்தியடையக் கூடாது என்ற திட்டத்தின்படி இப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றதா? ஏன்ற கேள்விகளை நாங்கள் எங்களுக்குள்ளேயே கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

வழக்கமாக ஒவ்வொரு பரீட்சையிலும் ஒருவரேனும் சித்தியடைகின்ற மருதமுனையிலிருந்து இம்முறை இப்பரீட்சையில் ஒருவரும் சித்தியடையாதிரு;பபதும் எமது அறிவுச் சமூத்தை சந்தேகிக்க வைத்திருக்கிறது. இதனை மிகவும் கருத்தில் எடுத்து எதிர்காலங்களில் இதுபோன்ற தவறுகளை விடாது போட்டிப் பரீட்சைகளுக்கு சிங்கள மொழியிலாவது தோற்றி சித்தி பெற வேண்டும்.

மேற்படி மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகளோடு அடுத்த பிரிவாக நடைபெற்ற சிரேஷ்ட மற்றும் தகைமை அடிப்படையிலான பரீட்சையின் மூலம் நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவானவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. பரீட்சை புள்ளிகளோடு சேவைக்காலத்திற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படும் இப்பிரிவில் நாடுமுழுவதும் மொத்தமாக 165 பேர் தகுதி பெற்றிருக்கின்றார்கள். அவர்களுள் 9 முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். 

1. H. Mohamed Farook 42/5, Ampara Road, Sammanthurai
2. MI. Mohamed Shabdeen 200/1, M.M.M.V. Road, Akkaraipattu – 06
3. MHM. Sakariya 136, Mawanella Road, Palliporuwa, Hemmathagama.
4. SM. Mohamed Ali T/ Zahira College, Mosque Road, Trincomalee
5. MT. Mohamed Ashraff 676, Moulana Road, Oddamavadi – 01
6. SM. Hamza Lebbe 10, Fawas House Hewaheta Road, Deltota
7. AL. Meerasahibo Akbar Mosque Road, Valaichenai
8. MH. Mohamed Farok UK Walavu, Sammanthurai
9. MH. Mazahima Umma 659, Peradenya Road, Kandy

இந்த 9 பேருடன் தமிழர்களையும் சேர்த்து உத்தேசமாக 20 பேர் தமிழ் மொழியில் நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவாகி இருப்பின் மீதி 145 பேரும் சிங்களவர்களாகவே இப்பிரிவிலிருந்தும் தெரிவாகி இருக்கின்றார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 300 சிங்களச் சமூகத்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களோடு ஒப்பிடும் போது இரண்டிலுமாகத் தெரிவான 14 முஸ்லிம்களும் 4.66 சதவீதத்தினராகவே காணப்படுகின்றர் ஆரோக்கியமான ஒரு கல்விச் சமூகத்தை மதிப்பிடுவதற்கு இத்தகையை அடைவுகள் எமக்குப் போதுமானவை அல்ல. எமது நிர்வாகரீதியான அதிகாரங்களை நாங்கள் இப்பரீட்சைகள் மூலம் பறிகொடுக்கின்றோமா? என்ற கேள்வியினை இந்த முடிவுகள் எமக்குப் புலப்படுத்துகின்றன. 

No comments

Powered by Blogger.