தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சி - அலுகோசு இராஜினாமா
தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக அலுகோசு பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அலுகோசு பதவிக்காக அண்மையில் நியமிக்கப்பட்ட இருவர், அறிவிக்காமலேயே கடமையிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அலுகோசுவாக நியமிக்கப்பட்டார்.
எனினும், இவரது பதவிக் காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் அமைந்துள்ள தூக்கு மேடையை பார்த்து அதிர்ச்சியடைந்த குறித்த நபர் தனது பதவியை இராஜினமா செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே அலுகோசு பதவிக்காக நியமிக்கப்பட்ட ஒருவர் மீளவும் கடமைகளை பொறுப்பேற்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் 1970களின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1970 க்குப் பின் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை என்றால் எதற்காக அளுகோஸ்? ஒரு குளுகோஸை நியமித்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தானே.
ReplyDelete