பொலிஸாரை கொண்டு கூலிப்படை நடாத்திய வாஸ் குணவர்தன
கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்டு கூலிப்படை ஒன்றை நடத்தியுள்ளார் என அரச சட்டத்தரணி வசந்த பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் முஹமட் சியாமின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாஸ் குணவர்தன தலைமையிலான இந்தக் கும்பல் முஹமட் சியாம் படுகொலையை மட்டுமன்றி மேலும் கொலைகளையும் குற்றச் செயல்களையும் மேற்கொண்டுள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய காரணத்தினால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் கோருகின்றேன்.
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினால் அவர்கள் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Post a Comment