சவுதி அரேபிய இளவரசராக முகிரின் அறிவிப்பு
சவுதி அரேபிய மன்னர், அப்துல்லாவின், ஒன்றுவிட்ட சகோதரரும், முன்னாள் உளவு துறை தலைவருமான, முகிரின் பின் அப்துல் அஸிஸ், பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னராக அப்துல்லாவும், 89, பட்டத்து இளவரசராக ராணுவ அமைச்சர் சல்மானும், 78, உள்ளனர். கடந்த 2005ல், மன்னர் பாஹித்தின் மரணத்திற்கு பின், அப்போதைய பட்டத்து இளவரசரான, அப்துல்லா மன்னராக பொறுப்பேற்றார். அரபு சாம்ராஜ்யத்தை மன்னர், அப்துல் அஜீஸ் அல் சவுத் நிறுவினார்.
அவரது மகனான இளவரசர் முகிரின் தற்போது துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின்படி, பட்டத்து இளவரசர் இல்லாத நிலையில், அந்தப் பதவியை வகிக்கவும், மன்னருக்குப் பின் அரியணை ஏற யாரும் இல்லாதபோது, மன்னராக பொறுப்பேற்கவும், முகிரினுக்கு உரிமையுள்ளது. முகிரினின் நியமனத்தை எதிர்க்கவோ, மாற்றவோ யாருக்கும் உரிமையில்லை என்ற நியமன ஆணையில், மன்னரும், பட்டத்து இளவரசரும், கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டதை அடுத்து, இளவரசர் முகிரின், சட்டபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள, முகிரின், தற்போது, ஹெய்ல் மற்றும் மதீனாவின் கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
Post a Comment