அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
(எம்.ஏ.றமீஸ்)
கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் இன்று(08)அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்வி அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி பெற்ற 475 மாணவர்கள் இதன்போது சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்டத்தில் 10 மாணவர்களுக்கு மேல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பாடசாலைகளுக்கு விஷேட ஞாபகச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது பல்வேறுபட்ட சமூக சேவைகள் புரிந்து வரும் இளம் வர்த்தகரும் மைஹோப் குழுமத்தின் பணிப்பாளருமான தேசமான்ய லயன் சித்தீக் நதீரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Post a Comment