Header Ads



தேர்தல் தொடர்பில் ஆஸாத் சாலியின் பத்வா..!

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (05.03.14) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

இந்த நாட்டின் தற்போதைய நிலையை எடுத்து நோக்குகின்ற போது மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றார்கள் என்பது நன்றாக புலனாகின்றது. நாட்டில் கொலைகள் மட்டுமன்றி கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. இரண்டு வார காலப் பகுதிக்குள் நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஆங்காங்கே கொள்ளை அடிக்கப்பட்டு;ள்ளன. கடைகள் உடைக்கப்பட்டும் பட்டப்பகலில் கடைகளுக்குள் புகுந்தும் கொள்ளைகள் அடிபக்கப்படுகின்றன.நேற்று நுகேகொடையிலும் தங்க நகைக் கடையொன்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் கையாலாகாத் தனம் தான் இதில் இருந்து தெரிகின்றது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று அரசு தம்பட்டம் அடிக்கின்றது. ஆனால் இந்த நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதை இந்த அரசால் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததா? எத்தனோல் கொண்டு வருவதை நிறுத்த முடிந்ததா? கொலைகளையும் கொள்ளைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததா? அமைச்சர்கள் திருடுவதை நிறுத்த முடிந்ததா? அமைச்சர்களின் திருட்டுக்கள் பற்றி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறையிட்டால் அது பற்றி அங்கு விசாரிப்பதற்கும் எவரும் இல்லை. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலட்சனம்.

இந்த நிலையில் தேர்தல் ஒன்று வரும்போது அமைச்சர் ஹக்கீமுக்கும் ஜனாதிபதிக்கும் எப்படியாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு விடும். தேர்தல் காலங்களில் இது சகஜமாகிவிட்டது. இந்த முறுகல் நிலையை வைத்துக் கொண்டு ஹக்கீம் தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்குச் சென்று இந்த ஜனாதிபதி ஒரு காண்டாமிருகம். அவரோடு பணியாற்ற முடியாது. அவர் முஸ்லிம்களை மதிப்பதில்லை. நாம் கூறும் கருத்துக்களை செவி மடுப்பதில்லை. இந்த அரசில் இனிமேலும் இருக்க முடியாது. நாம் விரைவில் வெளியேறி விடுவோம் என்றெல்லாம் கூறித் திரிவார். இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஹக்கீம் இந்த மாதிரி கருத்துக்களை தமிழில் மட்டும்தான் பேசுவார். தமிழ் பத்திரிகைகளில் மட்டும் தான் அது வெளிவரும். இப்படிக் கூறியே முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாடி கடைசியில் மீண்டும் அமைச்சரவையில் சென்று அமர்ந்து கொள்வார். இன்று இப்படி ஒரு நாடகத்தை மீண்டும் தொடங்கி இருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி இவை சாதாரண விடயங்கள் அவ்வளவு தூரம் பெரிது படுத்த தேவையில்லை. ஒரு கணவன் மனைவிக்கு இடையில் வருகின்ற பிரச்சினை போல்தான் இந்தப் பிரச்சினையும் என்று கூறுகின்றார். ஆனால் இங்கு யார் கணவன் யார் மனைவி என்பது தான் தெரியவில்லை. கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது நடந்ததும் இதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்வோம் என்று கூறிக் கொண்டு இந்த அரசாங்கத்தை இயலுமானவரை திட்டித்தீர்த்து மக்களின் வாக்குகளை சூறையாடிய பின் கிடைத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தவர்தான் ஹக்கீம். அன்று ஹக்கீம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்மைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருந்தால் இன்று முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இந்தக் கதி ஏற்பட்டிருக்காது. இன்று என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள் பள்ளிவாசல்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றன.இதைப் பற்றி நாம் சொன்னால் ஊடகங்களில் கூட எதுவும் வருவதில்லை. எமது கருத்துக்களை நீங்கள் கூட எழுதுவதில்லை. பொது பல சேனா எதுவும் சொன்னால் அதை மட்டும் தவறாமல் பிரசுரிக்கின்றீர்கள். இந்த உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். நீங்கள் பிரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை. நாம் சொல்லியே தீருவோம். வேறு வழிகளில் நாம் இதை வெளிக் கொண்டு வருவோம்.

கடவததை வீதி பள்ளிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தில் கடந்த ஆறாம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர். 20ம் திகதி ஒருவருக்கும் தெரியாமல் பள்ளிவாசலை மூடும் உத்தரவை நீதிமன்றத்தில் இருந்து இரகசியமாகப் பெற்றுள்ளனர். அதேநேரம் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் சிரேஷ்ட அமைச்சர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு பாதுகாப்புச் செயலாளரை கொண்டு வந்து முஸ்லிம்கள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துகின்றார். இந்த பேச்சு வார்த்தையின் போது அவர் அங்கிருந்தவாறு தனக்கு எதுவுமே தெரியாதது போல் பொலிஸ் உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசி பள்ளிவாசலை மூட வேண்டாம் என்கிறார். அனால் பொலிஸார் ஏற்கனவே இரகசியமாக நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுள்ளனர். பிறகு இது நீதிமன்ற விடயமாயிற்றே எனக் கூறி சமாளிக்கின்றனர். எப்படி இருக்கின்றது நாடகம்? பொலிஸார் பெற்றுக் கொண்ட நீதிமன்ற உத்தரவை நான்காம் திகதி தான் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கின்றனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிழையானது எனக் கூறி அதற்கு எதிராக 5ம் திகதி மனுச் செய்ய நீதிமன்றம் சென்றால் நீதிமன்ற பதிவாளரும் நீதிபதியும் அந்த ஆட்சேபனையை ஏற்க மறுக்கின்றனர். எந்தவொரு நீதிமன்றத்திலும் முற்பகல் 11 மணிக்கு முன் மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆனால் இந்த விடயத்தில் காலை 9.20க்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. 9.15உடன் மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டதாக சட்டத்தரணிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தவறான சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்றத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.இந்த முறைப்பாடு குறித்து சட்டரீதியான எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. இது சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரு பள்ளிவாசல். இதை மூடச் சொல்லும் உத்தரவு எந்த ஒரு பிரதேச செயலாளருக்கும் கிடையாது. இதனை மூடிவிடுமாறு பொலிஸார் அச்சுறுத்தவும் முடியாது. இந்த பள்ளிவாசலால் தமக்கு இடைஞ்சல் என்று கூட எவரும் கூற முடியாது காரணம் இங்கு ஒலி பெருக்கிகிளக் கூட நாம் பாவிக்கவில்லை. இவை எல்லாம் எமது தரப்பில் உள்ள நியாயங்கள். ஆனால் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றம் இவற்றை எல்லாம் செவி மடுக்கக் கூட தயாராக இல்லை. அப்படியானால் இந்த நாட்டில் சட்டம் நடைமுறையில் உள்ளதா? நீதிமன்றங்களில் சென்று முறையிடக் கூட முடியாத நிலையில் அல்லவா முஸ்லிம்கள் உள்ளனர். இது தொடர்ந்து நடக்கின்றது. அனால் எமது முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் வர்த்தகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளரை அழைத்து வந்து முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கின்றனர். வாத்தகர்களின் செல்வ நிலையைக் காட்டிக் கொடுத்து அவருக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்பட முஸ்லிம் அமைச்சரே வழிவகுக்கின்றார்.

இந்த மாதிரியான ஒரு பின்னணியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் இந்த அரசுக்கு அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிககோ அல்லது அதனோடு இணைந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டு தேர்தலில் மட்டும் தனியாகப் போட்டியிடும் அமைச்சர்களின் கட்சிக்கோ முஸ்லிம்கள்; வாக்களித்தால் என்னைப் பொறுத்த மட்டில் அது கிட்டதட்ட முஸ்லிம்கள் ஹராமான ஒரு காரியத்தை செய்வதற்கு சமனானதாகும். அரசுக்கும் அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் வாக்களிப்பது இந்த நாட்டில் எஞ்சியுள்ள பள்ளிவாசல்களை உடைப்பதற்கு முஸ்லிம்களே தேவையான ஆயுதங்களை அள்ளி வழங்குவதற்கு சமனானதாகும். எனவே நடைபெறவுள்ள தோதல்களில் முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக அரசைப் புறக்கணித்து இந்த அரசுக்கு ஒரு பாடம் புகட்ட தயாராக வேண்டும்.

பள்ளிவாசல்களும் கோhயில்களும் ஆலயங்களும் உடைப்பதற்காக கட்டப்படுபவை அல்ல.அவை மக்கள் வழிபடவும் இறை ஆசீர்வாதத்தைப் பெறவும் கட்டப்படுபவை. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் யாரும் உடைக்க முடியாது. பூட்டிவிடுமாறு அச்சுறுத்தவும் முடியாது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வழிபாட்டுத் தலங்களை யாரும் மூட வேண்டாம். இந்த அநியாயங்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து சட்டப்படி போராடுவோம். நிச்சயம் எமக்கு நியாயாம் கிட்டும். அரசுக்கு கட்டிடங்களை உடைக்க வேண்டும் என்ற தேவை இருந்தால் எல்லோருமாக சேர்ந்து இந்த நாட்டின் சூதாட்ட நிலையங்களையும் மதுபான விற்பனை நிலையங்களையும் விபசார விடுதிகளையும் தகர்ப்போம். அதற்காக எல்லோரும் ஓரணியில் திரள்வோம்.

இப்படி ஒருநிலையில் சர்வதேச சமூகம் ஏன் இந்த நாட்டின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. அவர்கள் தலையிட வேண்டும்.அப்போது தான் இந்த அரசின் அநியாயங்களும் குற்றங்களும் வெளிச்சத்துக்கு வரும். கொள்கலன்களில் கொட்டைப் பாக்கு கொண்டு வந்து ஒரு அமைச்சர் அதை சுங்கத் திணைக்கத்திடமிருந்து வெளியே கொண்டு வர பெரும் பாடு படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 15 கொள்கலன்களில் இவற்றை சட்டவிரோதமாகக் கொண்டு வந்து சட்டவிரோதமாகவே அதை வெளியே எடுத்துச் செல்லவும் அமைச்சர் பெரும் அவஸ்தைப் படுவதாக கூறப்படுகின்றது. முன் ஒரு போதும் இல்லாத அளவுக்கு நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வரப்படுகின்றது. சந்தையில் தேவையான அளவு அது கிடைக்கின்றது. இந்தளவு போதைப் பொருள் கொண்டு வரப்பட்டு இந்த நாடே சுடுகாடாக மாற்றப்படுகின்றது. இதை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அரசில் நல்லதை செய்வதற்கு ஆற்களுக்கு பஞ்சம் நிலவுகின்றது. ஆனால் அரசுக்காக வக்காளத்து வாங்கவும் கெட்ட காரியங்களை செய்யவும் தேவைக்கும் அதிகமாகவே ஆற்கள் உள்ளனர். இதுதான் இன்றை அரசின் நிலை.

சருவதேச மட்டத்தில் நாட்டுக்கு எற்படவுள்ள ஆபத்து பற்றி அமைச்சர்கள் ஆறுபேர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அந்த வேண்டுகோள் இன்று செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. அது மட்டுமல்ல இந்த அமைச்சர்கள் ஆறு பேருக்கும் எதிராக இன்னொரு பிரிவு அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.அதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. இந்த அமைச்சர்கள் ஆறுபேரும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதன் பொருள்.அப்படியாயின் அது அரசுக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை புலப்படுத்தவில்லையா?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ரஜரட்டை சேவையில் தமிழ் மக்களுக்காக ஒதக்கப்பட்டிருந்த ஒன்றரை மணிநேர நிகழ்ச்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இது பற்றி மத்திய மாகாண சபையின் சிங்கள உறுப்பினர்கள்; கூட மாகாண சபையில் குரல் எழுப்பி உள்ளனர். ஆனால் யாரும் இது வரை இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை. ஏன் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன. இது சண்டித்தனம் மிக்க ஆண்டாக மாறிவிட்;டது. இந்த அரசுக்கு எதிராக நீதிமன்றங்களில் கூட முறையிட்டு நியாயம் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

No comments

Powered by Blogger.