இனவாதத்திற்க்கு எதிரான பதிலாக, முஸ்லிம்கள் தமது தெரிவாக ஜே.வி.பி. யை பார்த்தால்..?
(நஜீப் பின் கபூர்)
நமது நாட்டு ஜனாதிபதி கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நல்ல வழியிலோ அதற்க முரனாகவே தனது கூட்டில் கட்டிப் போடுவதில் வல்லவர். அரசியல் ரீதியில் இதனை எவரும் பிழை என்று குறிப்பிடவும் முடியாது. ஆளும் தரப்பு எந்தளவிற்கு எதிரணியில் செயல்பாடுகளை பலயீனப் படுத்துகின்றததோ அந்தளவிற்குத்தான் அதன் ஆட்சிக் காலம் நீடிக்கும். இந்த வகையில் நமது ஜனாதிபதியின் காய் நகர்த்தல்களை அவரது அரசியல் எதிரிகள் விமர்சித்தாலும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது.
இனவெறி கொண்ட சிறிய பௌத்த குழுக்கள் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரக அத்துமீறிய வன்முறைகளையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தட்டிக்கேட்காத காரணத்தால் ஆளும் தரப்பினர் மீது முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய சந்தேகம் தோன்றி இருக்கின்றது என்பதை ஒழிவு மறைவின்றி குறிப்பிட வேண்டும்.
நேற்றும் மாவனெல்லையில் முஸ்லிம் ஒருவரின் பெயரில் நீண்டகாலம் இருந்து வந்த ஒரு ஒழுங்கையின் பெயர்ப் பலகையை பிடிங்கி எறிந்து அந்த இடத்திற்கு அநாகரிக்க தர்மபாலவின் பெயரைக் கொண்ட அறிவித்தல் பலகையை நாட்டி அந்த இடத்தில் கூட்டமும் போட்டிருக்கின்றார்கள் இந்த நாட்டின் உத்தியோகப் பற்றற்ற பொலிஸ் படை.
ஆனால் இந்த இடத்திலும் வழக்கம் போல் பொலிஸ் பார்வையாளர்களாக இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான செய்திகளை ஆளும் தரப்பிலிருந்து கொண்டு அடக்கி வாசிப்பவர்கள் தேர்தல் காலம் என்ற படியால் வாய் கிலியக் கத்து கின்றார்கள். தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இவர்கள் பெட்டிப்பாம்பாகி விடுவார்கள் என்பது சமூகத்திற்குத் தெரியும்.
இந்த அரசுக்கு ஆணவம் பிடித்திருக்கின்றது என்ற கூறுகின்றவர்கள் அதன் ஆணவத்தை அடக்காமலே கலுத்தைப்பிடித்து வெளியே தள்ளினாலும் நாம் போகத்தயாரில்லை என்று பகிரங்கமாகவே பேசி அதற்கும் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றார்கள். இவர்கள் சொல்வது தான் நியாயம் என்று அவர்களுக்காக கைதட்ட ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கின்றது.
பிரதான எதிர்க் கட்சியான ஐ.தோ.க. கோமாவிலிருந்து எழுந்திருப்பதற்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்வேதான் வருகின்ற ஜனாதிபத் தேர்தலிலும் பொது வேட்பாளரின் தலையில் அதனைக் கட்டிவிட அந்தக் கட்சி இப்போது ஆள்தேடித் திரிகின்றது.
எனவே இந்த நாட்டு முஸ்லிம்கள் அவர்களை நம்பி இருப்பதில் பயனேதும் ஏற்படப்போவதில்லை. பொதுவாக ஐ.தே.க. சர்வதேச முஸ்லிம் விரோதப் போக்கை கொண்ட தலைவர்கள் உள்ள கட்சி. ஷரியா சட்டத்தை மிருகங்களின் சட்டம் என்று சொல்லி புனித குர்ஆனையே கடந்த காலங்களில் கேள்விக் குறியாக்கியவர்கள் இவர்கள்.
சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கின்றார்கள் இவர்கள். அரசியல் ரீதியாக முஸ்லிம் பிரதிநித்துவங்களை இல்லாமல் செய்;ய வேண்டும் என்பதற்காக திட்மிட்டு பெரும் எண்ணிக்கையானவர்களை முஸ்லிம் பிரதேசங்களில் வேட்பாளர்களாகக் களமிறக்கி கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதகளை இவர்கள் இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.
இந்த இணையத் தளத்தில் ஓரிடத்தில் எங்களது கட்சியிலிருந்து பலபேர் ஆளும் தரப்பிற்குப் போக இருக்கின்றார்கள் என்ற துப்பை முதலில் எனக்குத் தந்தது அமைச்சர் டலஸ் அலகப்பெரும என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேசி இருக்கின்றார். அவரது அந்து பேச்சிலிருந்து நான் தனித்துவிடுவேன் எனவே நானும் அவர்களுடன் சேந்து ஒற்றுமையாக அங்கு சென்றிருக்கின்றோன் என்று தான் இதனை அரசியல் அரிச்சுவடி படிக்கின்ற சிறு பிள்ளை கூட புரிந்து கொள்ளும்.
அவர்கள் போய் பட்டம் பதவிகளைப் பெற்றுக் கொண்டால் நான் மட்டும் என்ன வாழ வெட்டியாக இருக்க முடியுமா எனவே தான் நானும் பட்டம் பதவிளை விட்டுக் கொடுக்காமல் எடுத்திருக்கின்றேன், என்று அவரது பேச்சிலிருந்த தெரிகின்றது. மு.காவிலுள்ளவர்கள் நாங்கள் சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுகிறார்கள் என்பதை பகிரங்கமாகச் செல்லி வருகின்றார்கள். எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது ஆளும் தரப்பிலுள்ள அதிகாரம் படைத்தவர்களிடம் நாங்கள் தேர்தல் மேடைகளில் இப்படித்தான் பேசுவோம் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டுதான் இந்த நடகங்கள் நடக்கின்றதோ என்று எண்ண வேண்டி இருக்கின்றது.
ஜனாதிபதி கூட நான் யாரையும் வெளியேற்ற மாட்டேன் என்று கூற இவர்களும் அவர்கள் வெளியேற்றிப் பார்க்கட்டும் என்று சமாந்திரமாகப் ஒரே தொணியில் பேசி வருக்கின்றனர். இதனையும் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அஸ்ரஃபிற்குப் பின்னர் எல்லோரும் தலைவர்கள் என்று குறு நிலங்களை மையப்படுத்தி தமது தலைமையை வளர்த்துக் கொள்ளத் தலைப்பட்டு இருப்பதனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் செல்லாக காசாகிப்பேய் இருக்கின்றது. இந்தத் தலைவர்கள் பார்க்கின்ற வேலைகளினால்.
முற்றிலும் சுயநலம் கலந்த இந்த சரணாகதி அரசியலுக்கு முஸ்லிம்கள் தரப்பில் எப்படிப் பதில் கொடுக்க முடியும் என்று நமது சமூகம் சிந்திக்க வேண்டும். நாங்கள் சுயநலம் கலந்த அரசியல்தான் பார்க்க முடியும் என்று அதற்கு விகிதக் கணக்குப் போட்டுப் பேசுபவர்கள்தான் இன்று முஸ்லிம் தலைவர்கள். இது இஸ்லாத்தின் பார்வையில் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும். இவர்களினால் பொது பலசேன போன்ற வன்முறையாளர்களை எப்படி எதிர் கொள்ள முடியும் என்பதனை தற்போது முஸ்லிம் சமூனம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமூகத்தின் பேரால் காட்சி சமைத்திருக்கின்றவர்கள் தேர்தல் காலங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன்களாக மேடையில் கத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் முடிந்துவுடன் இந்த சத்தங்கள் ஓய்ந்து விடும். அடிவாங்குகின்றவர்ளும் அச்சுறுத்தர்படுகின்றவர்ளையும் ஒருபோதும் இந்த முஸ்லிம் தலைவர்களினால் காப்பாற்றவோ பாதுகாக்கவோ முடியாது என்பது மிகத் தெளிவு.
இந்த விடயத்தில்தான் நாம் ஒரு பரீட்ச்சார்த்த முயற்சியை செய்து பார்த்தால் என்ன என்ற கேள்வியை நமது சமூகத்திடம் கேட்க விரும்புகின்றோம். ஜே.வி.பி. கடும்போக்கு அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றுபவர்காளாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் ஏதேனும் துரோகங்களை செய்திருக்கின்றார்களா என்று தேடிப் பார்த்தால் நாம் அறிந்தவரை அப்படியான தவறுகள் ஏதும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற தெரிய வில்லை.
முஸ்லிம்கள் சார்பில் அவர்கள் இதய சுத்தியுடன் குரல் கொடுத்த வந்திருக்கின்றார்கள். முஸ்லிம் வாக்குச் சாவடியில் ஜே.வி.பி.க்கு எவராது வாக்களித்திருந்தார்கள் என்றால் அது தவறுதலாக நடந்திருக்கலாம் என்று எண்ணும் அளவிற்கு முஸ்லிம்கள் ஜே.வி.பி.யை ஆதரிப்பதில் ஆனால் முஸ்லிகளுக்காக அவர்கள் எந்த இடத்திலும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்ள்.
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் தமக்காக குரல் கொடுக்கின்ற ஜே.வி.பிக்கு தெரியும் படி ஒரு வாக்கைப் போட்டுப் பார்த்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இந்த முஸ்லிம் விரோத கும்பலுக்கு ஒரு போதும் நமது தலைவர்களைப் போன்று ஜே.வி.பி. அஞ்சி ஓடமாட்டாது.
முஸ்லிம் தலைவர்களைப் பயமுறுத்துகின்ற பாணியில் ஜே.வி.பி.யை இந்த இன வன்முறையாளர்களினால் ஒரு போதும் பயமுறுத்தவும் முடியாது. அவர்கள் ஒரு போதும் இதுபோன்ற விடங்களிலிருந்து தப்பி ஓடவும் மாட்டாhக்ள. முஸ்லிம் சமூக்ததை முஸ்லிம் தலைவர்களினால் அல்லது அரசால் காப்பற்ற முடியாது என்ற நிலiயில் இந்த முறை நமக்காக பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்து வந்திருக்கின்ற ஜே.வி.பி.யை ஆதரிhத்து ஒரு பரீட்சார்த்த முயற்ச்சியை முஸ்லிம் சமூகம் செய்து பார்த்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. இந்தக் கருத்துப் பற்றிய சமூக விமர்சனம் எதிர்பார்க்கப்படுகின்றது..!
ஆம் நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்தமுறை எனது ஒட்டு ஜேவிபி இக்குதான். மற்றவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்
ReplyDeleteyes its true i agree
ReplyDeleteYes....JVP is much better choice...................
ReplyDeleteYes realy my and oll of my family vots for JVP. We hope Jvp do best then muslim congres
ReplyDeleteநிச்சயமாக, மனதில் நினைத்ததை இங்கு பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது. ஆம் எனது வாக்கும் ஜேவிபி குதான்.
ReplyDeleteMy vote also for jvp.
ReplyDeleteJvp is the perfect politicsl party in sri lanka
Good idea. Every Muslims should vote for JVP
ReplyDeleteJVP Leader Is Very Intelligent Guy & Smart I am also Support FOR JVP
ReplyDelete