மத நல்லுறவுக்காக மஹிந்தவுடன் பேச விரும்பும் சந்திரிக்கா - ரணிலுடனும் பேச்சு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அறிவித்துள்ளார். சமயங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் சந்திரிக்கா ஈடுபட்டுள்ளர்.
தென் ஆசிய பிராந்திய வலய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகம் என்ற பிராந்திய அமைப்பு ஒன்றின் முக்கிய பதவியை சந்திரிக்கா வகித்து வருகின்றார்.
மதங்களுக்கு இடையில் நல்லுறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் அந்த அமைப்பின் பரிந்துரைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பகிர்ந்து கொள்ள சந்திரிக்கா திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமன்றி நாட்டின் ஏனைய பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் மத நல்லுறவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத நல்லுறவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று முற்பகல் 10.00 மணிக்கு சந்திப்பு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் ரணிலுடன் தலைமைத்துவ பேரவை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர்.
Post a Comment