கல்முனையில் மனித உரிமைகள் ஆணைக்குழு செயலமர்வு
ஏ.பி.எம்.அஸ்ஹர்+யூ.எல்.றியாஸ்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடுசெயயப்பட்ட ஆலோசகர்கள்குழுக்கள் பங்குதாரர்கள் மற்றும் சிவில்சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று 27-03-2014 கல்முனையில் நடைபெற்றது
கிறிஸ்ட இல்லத்தில் இலங்கைமனித உரிமைகள்ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லதீப்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைமனித உரிமைகள்ஆணைக்குழுவின கல்முனைப் பிராந்திய அலுவலகத்தினால் கடந்தஆண்டுஅமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு அமுல்படுத்தப்படவுள்ளவேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதில் சமூகத்தலைவர்கள் பங்குதார நிறுவனங்கள் சிவில்சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொலீசார் அரசஅதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment