Header Ads



ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைவு இதுதான்..!


ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைவு இன்று 24-03-2014 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைவு அமைந்துள்ளது. 

இந்த இறுதி வரைவின் முக்கியமான 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, “நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் சிறிலங்காவில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனிதஉரிமை மீறல்கள்,துஷ்பிரயோகங்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.