Header Ads



அமைச்சரவை கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் மீது மீண்டும் குற்றச்சாட்டு..!


சட்டக்கல்லூரிக்கு சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

20-03-2014 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து கூட்டத்தில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சட்டக்கல்லூரிக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அநீதியான வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இதேபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதுடன் இது பாரிய அநீதி எனவும் இதன் பின்னணியில் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

போதுமான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் இதற்கு பதிலளித்துள்ளார். எனினும் நீதியமைச்சர் தலையிட்டு சட்டக் கல்லூரிக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிங்கள அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மாணவர்கள் நுழைவு தேர்வு மூலமே சட்டக் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

எனினும், நீதியமைச்சரின் தலையீட்டிலேயே அதிகளவில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

No comments

Powered by Blogger.