Header Ads



'என்னுடன் விளையாட வேண்டாம்' - ரவூப் ஹக்கீமுக்கு மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை


(நஜீப் பின் கபூர்)

அரசிலிருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசுக்கு எதிராக செலற்றுகின்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது உங்களுக்கு எங்கள் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாவிட்டால் நீங்கள் உங்களுடைய ஆட்களை எடுத்துக் கொண்டு அரசியலில் இருந்து வெளியேறுவது தொடர்க எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கச அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதற்குப் பதிலளிக்க முயன்ற ரவூப் ஹக்கீம் எங்களுடைய கட்சியிலுள்ள பிரச்சினை எனக்குத்தான் தெரியும். அந்த அழுத்தங்கள் காரணமாகத்தான் நான் முஸ்லிம்கள் தொடர்பாக நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டது.

இதுவிடயத்தில் நான் உங்களைச் சந்திக்கப் பல முறை சந்தர்ப்பம் கேட்டாலும் அது கிடைகாக நிலையில்தான் இது நடந்தது என்று நிலமையை அவர் சமளிக்க முனைந்த போது ஆத்திரம் கொண்ட ஜனாதிபதி நீங்கள் எப்போதும் இப்படித்தான் உங்களை எனககுத் தெரியாதா பல கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டுக்களை அமைத்துக் கொண்டு ஆளும் தரப்பிலும் இருந்து கொள்ள முனைகின்ற ஒருவர்தானே.! என்னுடன் இந்த விளையாட்டை செய்ய வரவேண்டாம் என்றும் ஜனாதிபதி அங்கு பேசி இருக்கின்றார்.

நீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆட்களை எடுத்தக் கொண்டு ஆளும் தரப்பிலிருந்து நீங்கள் வெளியேறமுடியும் என்று கடும் தொணியில் ஜனாதிபதி பேச அமைச்சர் ஹக்கீம் அதற்கு எந்தப்பதிலும் சொல்லவில்லை. இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஹக்கீம் என்னை கழுத்தால் பிடித்து வெளியே தூக்கி எறியும் வரை அரசுடன்தான் நான் ஒட்டிக் கொண்டிருப்பேன் இருப்போன் என்று அடம்பிடித்ததும் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

4 comments:

  1. Sabaaaas.. is it enough for all of u Mr. Hakeem first u all should learn the politic in Islam, where is the Oath of Allahu Akbar to get the support from Allah,,,,, even the person who is president for the country or President for the world. Kaafer... Khaafer no body know about benefit of halal and prohibit of haram

    ReplyDelete
  2. கௌரவ ஜனாதிபதி அவர்களே.... எமது 'தலைவர்' பதவிற்கு ஆசைப்படுபவரல்ல.... இதற்குப்பிறகு ஒருநாள் கூட உங்களுடனோ உங்கள் கூட்டத்தினரோடோ சார்ந்து இருக்க மாட்டார். வெகு விரைவில்.... விரும்பியோ விரும்பாமலோ... வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேரப்போகிறார்......!!1

    ReplyDelete
  3. தாண் வாழ்வதா்காக நண்பணன குழில் தள்லுபவண்தண் தணலவண்

    ReplyDelete
  4. வாழ்வா சாவா போரட்டம் இதுதான்.அப்போது ஒருனேரம்,முஸ்லிம் காங்கிறாஸ் இல்லையென்றால் ஆளும் தரப்பே இல்ல்லை என்று.
    அந்த நிலைமை மீண்டும் வர பாடுபடுங்கள்.

    கடவுளின் தண்டணைகள்/சோதனைகள் பலவிதம்,அதில் இதுவும் ஒருவிதம்.நீங்கள் விட்ட பலதசாப்த தவறுகள்தான் இவை என்றும் கூறலாம்.இறைவனை நேசியுங்கள்,நம்புங்கள் அவனுடைய வேதத்தை அவன் சொல்லுவதுபோலே இந்த பூமியில் நிலைனிறுத்த குறைந்தது மனதளவிலாவது என்னுங்கள்.

    வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
    கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

    என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
    என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
    அடே மகிந்தா......உண்மை சொல்வேன்
    சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்.

    ReplyDelete

Powered by Blogger.