அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் துரத்தப்படுமா..?
(Gttn) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க விருப்பமா இல்லையா என்பதனை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், ஜனாதிபதி இதணைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆவணமொன்றை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளனர்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டு 50 பக்க அறிக்கை ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற இடங்கள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களும் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆவணத்தை தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆத்திரமடைந்த ஜனாதிபதி, இது குறித்து விளக்கமளிக்குமாறு ரவூப் ஹக்கீடம் கோரியுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை ஜனாதிபதியினால் கட்டுப்படுத்த முடியாததனைப் போன்றே, தம்மால் தமது கட்சியின் சில உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடிவதில்லை என ரவூப் ஹக்கீம் பதலளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரே இந்த அறிக்கையை நவனீதம்பிள்ளையிடம் ஒப்படைத்துள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அல்லாஹ்வுக்கு பயந்த முஸ்லிம் தலைவர் என்று நினைத்து விட்டன் முழுவதையும் படிக்கமால் .
ReplyDelete