Header Ads



டெங்கு நோயால் 9 வயதுடைய பாத்திமா சம்ஹா வபாத்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத் தில் நேற்று வியாழக் கிழமை பாடசாலை மாணவி யொருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். புதிய காத்தான்குடி பிர்தெளஸ் நகரைச் சேர்ந்த 9 வயதுடைய எஸ் பாத்திமா சம்ஹா எனும் மாணவி கடந்த புதன்கிழமை (12) அவர் கல்வி கற்கும் காத்தான்குடி பிர்தெளஸ் பாடசாலைக்கு சென்ற போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று சிகிச்சை பெற்ற மாணவிக்கு காய்ச்சல் குறையாததால் கடந்த சனிக்கிழமை (15.03.2014) மாணவியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பின்னர் குறித்த மாணவியை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். 

இந்த மாணவி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல். நசீர்தீன் தெரிவித்தார்.

குறித்த மாணவி காத்தான்குடி பிர்தெளஸ் பாடசாலையில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வந்தார். 

இம் மாணவி வசித்து வந்த வீடு மற்றும் பாடசாலை என்பன பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல். நசீர்தீன் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.