99 புள்ளிகள் வாங்கியதால் வயிற்றில் ஊசிகளை குத்திக்கொண்ட மாணவன்..!
சீனாவில் தேர்வில் 99% மதிப்பெண் வாங்கியதற்காக ஊசிகளை வயிற்றில் குத்திக் கொண்டு சிறுவன் ஒருவன் தனக்கு தானே தண்டனை வழங்கிக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீனாவில் மிக கடுமையான சட்டதிட்டங்கள் பள்ளிகள் உட்பட எல்லா இடங்களிலும் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பிற்காக ஒரு நாளில் பல மணி நேரங்களை செலவிடுகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், மனச்சிதைவு, கோபம், ஆத்திரம், பொறாமை இப்படி பல்வேறு பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாக திகழ்கிறது.சீனாவின் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன். ஒரு நாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார். அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊசிகளால் வயிற்றில் கடுமையான வலி இருந்துள்ளது. சிகிச்சையளித்த டாக்டர்கள், ஊசி எப்படி வயிற்றுக்குள் சென்றது என்பது பற்றி அந்த சிறுவனிடம் விசாரித்தனர். அவன் சொன்ன பதிலைக் கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். “பள்ளி இறுதி தேர்வில் 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால், 99 சதவீதம் தான் கிடைத்தது. எனவே ஆத்திரத்தால் என் மேலே எனக்கு கோபம் வந்தது. ஊசிகளை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டேன்Ó என்று பதிலளித்தான்.இதையடுத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அவர்களது நடவடிக்கைகளை தினமும் கவனிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் டாக்டர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Post a Comment