9 வயதில் விழுங்கிய விசில், 15 ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டது
சீனாவை சேர்ந்தவர், ஒன்பது வயதில் விழுங்கிய விசில், 15 ஆண்டுகளுக்கு பின், அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர், லியு யூகாங், 23. இவர், தன், ஒன்பதாவது வயதில், விளையாட்டாக, பிளாஸ்டிக் விசில் ஒன்றை விழுங்கி விட்டார். அந்த விசில், அவரது நுரையீரலில் சிக்கிக்கொண்டது. இதை அறியாத சிறுவன், வழக்கம்போல் இருந்துள்ளான். ஆனால், தூங்கும்போது மட்டும், மூச்சு விடும் சமயத்தில், விசில் சத்தம் கேட்டது. சிறுவன், வாலிபனாகிய பின், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், லியுவை பரிசோதித்த போது, அவரது நுரையீரல் திசுவில், விசில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம், லியுவிற்கு, அறுவை சிகிச்சை செய்ததன் மூலம், உடைந்த நிலையில் இருந்த விசில் வெளியே எடுக்கப்பட்டது.
Post a Comment