பாகிஸ்தானுக்கு 6 நீர்மூழ்கி கப்பல் விற்கிறது சீனா
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவத்தை பலப்படுத்த, சீன அரசு நீர்மூழ்கி கப்பல்களை விற்க முன்வந்துள்ளது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த ஓராண்டில் 10 நீர்மூழ்கி கப்பல்கள் விபத்தில் சிக்கின. இதில் கடற்படை வீரர்கள் சிலர் பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு நீர்மூழ்கி கப்பல்களை விற்க சீன அரசு முடிவு செய்துள்ளது. சீன அரசு 2014ம் ஆண்டுக்குள் 6 நீர்மூழ்கி கப்பல்களை, பாகிஸ்தானுக்கு விற்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக சீனா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதுÕ என்று வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்படும் எஸ்20 அல்லது யுவான் என்று பெயரிடப்பட்டுள்ள டீசல் எலக்ட்ரிக்கல் ரக நீர்மூழ்கி கப்பல்கள், பாகிஸ்தானுக்கு விற்கப்பட உள்ளன. அவை அணு ஆயுத தாக்குதல் நடத்த கூடிய அதிநவீன வசதி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு விற்றால் அமெரிக்காவின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். அதனால் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வசதியுள்ள நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு விற்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து வரும் தி நியூ ஏஜ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், சீன அரசு 035ஜி ரக டீசல் எலக்ட்ரிக்கல் நீர்மூழ்கி கப்பல் இரண்டை வங்கதேசத்துக்கு விற்க முன் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு வரும் 2019ம் ஆண்டுக்குள் நீர்மூழ்கி கப்பல்கள் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment