Header Ads



48 பேர் தோல்வி..!

நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 48 பேர் தோல்வி கண்டுள்ளார்கள்.

ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள், இந்த தோல்விகளை சந்தித்துள்ளனர்.

வாக்காளர் மத்தியில், புதிய வேட்பாளர்களின் பிரசாரங்கள் மற்றும் விருப்பு தெரிவு வாக்குகளை மையமாக கொண்ட பிரசாரங்களே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு மாகாண சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர்களை தேர்ந்தெடுப்பதற்காக, கூட்டமைப்பின் முதன்மை கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாளை கூடவிருப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கு இடையில், இரண்டு சபைகளுக்கும் எதிர்கட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயல்குழுவும் விரைவில் கூடவுள்ளது.

No comments

Powered by Blogger.