அரச உத்தியோகத்தர்களின் 4133 வாக்குகள் நிராகரிப்பு..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் அரச உத்தியோகத்தர்களால் அளிக்கப்பட்டிருந்த அஞ்சல் வாக்குகளில் 4133 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 2437 அஞ்சல் வாக்குகளும் தென் மாகாணத்தில் 1696 அஞ்சல் வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் 681 அஞ்சல் வாக்குகளும் கம்பஹா மாவட்டத்தில் 1006 அஞ்சல் வாக்குகளும் களுத்துறை மாவட்டத்தில் 750 அஞ்சல் வாக்குகளும் காலி மாவட்டத்தில் 762 அஞ்சல் வாக்குகளும் மாத்தறை மாவட்டத்தில் 555 அஞ்சல் வாக்குகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 379 அஞ்சல் வாக்குகளும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 3013 பேர் வாக்களிக்கவில்லை எனத் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு மொத்தமாக 112321 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 109308 பேர் மாத்திரமே தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
Post a Comment