Header Ads



ஜேர்மனியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 வயது சிறுமி - தந்தை மீது வழக்கு பதிவு


ஜேர்மனியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 வயது சிறுமியின் தந்தை மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியின் டுட்லிஜென்(Tuttlingen) நகரை சேர்ந்த 3 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள சாலையில் தனது மோட்டார் சைக்கிளை 70 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளாள்.

இதனை பார்த்த போக்குவரத்து ஒழுங்கப்படுத்தும் பணியிலிருக்கும் பொலிசார் சிறுமியை பின் தொடர்ந்து மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதையில் அச்சிறுமியிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரியவந்ததுள்ளது.

மேலும் சிறுமி ஓட்டுவதற்கு சில வழிமுறைகளை அவளது தந்தை கற்றுகொடுத்ததால், அவர் மீது பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சிறுமியை மோட்டார் சைக்கிள் ஓட்ட அவரது தந்தை அனுமதித்துள்ளார் என்றும் எல்.ஐ.சி மற்றும் ஓட்டுநர் உரிமம் விதிகளை மீறியதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.