Header Ads



நீர்கொழும்பு நீதிமன்றத்தினால் 3 பேருக்கு மரண தண்டனை

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மூவருக்கு நீர்கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்து தீரப்பளித்தார்.

களனி வனவாசலை பிரதேசத்தைச் சேர்ந்த சிரில் பியரத்ன (49 வயது), சஜீவ பிரியந்த (39வயது), பி. ஏ. நந்தபால (59 வயது)  ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.

பிரதிவாதிகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முச்சக்கர வண்டி சாரதியான இந்துனில் கிரிசாந்த  என்பரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை முடிவில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். vi

No comments

Powered by Blogger.