கல்முனையில் 2 இந்தியர்கள் கைது
(யு.எம்.இஸ்ஹாக்)
சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சற்று நேரத்துக்கு முன்னர் கல்முனை பொலிசாரினால் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் நெல் அறுவடை இயந்திரத்தில் சாரதிகளாக பணி புரிந்தவர்கள் என்றும் நாவிதன்வெளி பிரதேசத்தில் இருந்து நெல் அறுவடை செய்து விட்டு கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த போது சேனைக்குடி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. நாளை 08 இவர்கள் இருவரும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்தனர் .
Post a Comment