ஹிருணிக்காவுக்கு அதிக விருப்பு வாக்குகள் - தென் மாகாணத்தில் 2 நடிககைகள் தோல்வி..?
காலி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட ஷான் விஜேயலால், பிரசன்ன ரணதுங்க, ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோர் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.
மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர்களில் நதீஷா ஹேமமாலி விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 5 ம் இடத்தில் உள்ளார்.
அந்த மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.
அதேவேளை மாத்தறை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அனார்கலி 10 ம் இடத்திற்குள் இல்லை என கூறப்படுகிறது. tm
இந்திய அரசியலை பின் பற்ற வேண்டுமல்லவா.
ReplyDelete