2 முஸ்லிம் நாடுகளின் தீர்மானம், இலங்கைக்கு அதிர்ச்சி..!
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், சிறிலங்கா குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது மெக்சிகோ.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக, மெக்சிகோ ஏற்கனவே வாக்குறுதி வழங்கியிருந்தது.
2014ம் ஆண்டு ஜனவரி தொடக்கம், அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் புதிய 14 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 12ம் நாள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் மெக்சிகோ உள்ளிட்ட 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டன.
இதன்போது, சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்காது என்றும், ஒருவேளை ஒபாமா அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வலியுறுத்தினால், வாக்களிப்பில் பங்கேற்கமாட்டாது என்றும் சிறிலங்காவுக்கு மெக்சிகோ வாக்குறுதி அளித்திருந்தது.
இதனடிப்படையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் தெரிவுக்கான தேர்தலில் மெக்சிகோவுக்கு சிறிலங்கா ஆதரவு தெரிவித்திருந்தது.
எனினும் ஜெனிவாவில், அமெரிக்கத் தீர்மானத்தை மெக்சிகோ ஆதரித்திருப்பது சிறிலங்காவுக்கு அதர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா அதிகாரிகள், மெக்சிகோவிடம் கேள்வி எழுப்பியதற்கு, தாம் தீர்மான வாசகங்களை மென்மைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதாக பதிலளித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு சிறிலங்காவை ஆதரித்த குவைத், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இம்முறை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த்தும் சிறிலங்காவை ஏமாற்றத்துக்குளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கடும் அழுத்தங்களினால் தான் இந்த நாடுகள் நடுநிலை வகித்ததாக சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Post a Comment