28ம், 29ம் திகதி தேர்தல் முடிவுகளும், ரணிலின் பகிரங்க விவாத அழைப்பும்
(நஜீப் பின் கபூர்)
28ம் திகதி ஜெனீவாவில் நடைபெறுகின்ற தேர்தலை நாம் தோற்பது பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.29ம் தகதி நடைபெறுகின்ற தேர்தலில் எனது மக்கள் எனக்குப் பெரிய வெற்றியைத் தருவார்கள் இதனை இங்கு கூடியிருக்கின்ற மக்களைப் பார்க்கும்போது எனக்குப் புரிகின்றது.
ஜெனீவாவில் மேற்கத்திய ஆதரவாளர்கள் நாம் இதற்கு மேல் என்னதான் நல்ல தீர்வைக் கொடுத்தாலும் அதனை அவர்கள் ஒருபோதும் கண்டு கொள்ள மாட்டர்கள் அவர்கள் எம்மைத் தோற்கடிப்பது பற்றி எமக்குக் கவலையில்லை. ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றது என்று குறிப்பிட்டுத்தான் அங்கு புகுந்து இவர்கள் அட்டகாசங்களைப் பண்ணினார்கள்.
ஈராக்கை கைப்பற்றிய பின்னர் அங்கு இவர்கள் சொன்ன படி அப்படி ஆயுதங்கள் இருக்கவில்லை என்று அவர்களே பின்னர் குறிப்பிட்டார்கள். ஆனால் அங்கு நடந்த அழிவுகளுக்கும் படுகொலைகளுக்கும் இவர்கள் ஏதாவது விசாரணைகளை வைத்தார்களா என்று தனது பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி எழுப்புகின்ற கேள்விகள் முற்றிலும் யதார்த்தமானது.
எனவே ஜெனீவா தேர்தல் பற்றி எனக்கு எந்த அக்கரையும் கிடையாது மக்கள் என்னுடன் இருக்கம் வரை. அவர்கள் என்னை எதுவும் பண்ணமுடியாது என்று ஜனாதிபதி அடித்துக் கூறுகின்றார். இதற்கிடையில் நமது எதிர்க் கட்சித் தலைவர் ரணில் தற்போது ஜனாதிபதியை தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு பகிரங்கமாக அழைக்கின்றார். இந்த அழைப்பை இந்த நாட்டு மக்கள் ஒரு பெரும் ஜோக்காகத்தான் பார்க்கின்றார்கள். ரணிலின் அழைக்கும் விவாதத்திற்கு ஜனாதிபதி செல்ல வேண்டும் என்ற எவரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டிலுள்ள சிறு குழந்தைக்கும் அவர் ஆற்றல் பற்றித் தெரியும். குறிப்பாக ரணிலின் கட்சிக்காரரும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்.
சாதாரண ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கூட ரணிலுடன் விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டியதில்லை என்பது தான் வெகுஜன அபிப்பிராயம் தனது கட்சிக்குள்ளே கருத்து மோதல்களுக்கும் பெரும்பான்மை உணர்வுக்கும் இடம் கொடுக்காத ரணிலுக்கு ஜனாதிபதியை விவதத்திறகு அழைக்க எந்தத் தகுதியும் உரிமையும் கிடையாது. இந்த விவகாரத்தை ஒரு அரசியல் இசுவாக எடுத்துக் கொள்ள ரணில் முயன்றாலும் அது இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் அல்ல இன்று இந்த நாட்டில்லுள்ள மிகவும் அவமானத்திற்கு ஆட்பட்டிருக்கின்ற அரசியல் வாதிதான் ரணில். இது அவருக்கே புரியாமல் ஏதே அவர் தான்னை தேசியத் தலைவராக அவர் தன்னைத் தானே கற்பனை பண்ணிக் கொண்டிருப்பது மனநோய்கு மருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய விவகாரம்.
இந்த நாட்டு மக்களுக்கு ஏதும் நெருக்கடிகள் துன்பங்கள் ஏற்படுகின்றது என்றால் எதிர் கட்சியைப் பலயீப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு கடைக்குப் போகின்ற ரணில்தான் நூறு வீதம் பொறுப்பு இது தான் இந்த நாட்டின் தற்போதய மிகப் பெரிய அரசியல் பிரச்சனை. இதனைத்தான் இன்று இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரசையும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படித்தான் விவதாம் நடக்கின்றது என்று வைத்துக் கொண்டால் ஜனாதிபதி வார்த்தைக்குச் சமனாக இவரால் இரண்டு வார்த்தைகளைத்தானும் முன்கை;க முடியுமாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்புகின்றோம்.
Post a Comment