சீன ரெயில் நிலையத்தில் புகுந்து 27 பேரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்
சீனாவின் யுன்னான் மாகாணத்தின் ரெயில் நிலையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் 27 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரெயில் நிலையத்துக்குள் இரு கரங்களிலும் நீளமான வாட்களுடன் நுழைந்த அந்த கும்பல் கண்ணில் தென்பட்ட நபர்களை எல்லாம் கொடூரமான முறையில் வெட்டி சாய்த்தது. பீதியுடன் அலறியடித்து ஓடியவர்களை விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பலின் கொலைவெறி தாகுதலுக்கு 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குற்றுயிரும், குறை உயிருமாய் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளை சீனத் தொலைக்காட்சிகள்தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.
இந்த கோரத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனினும், கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்னும் பெயரில் சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தை தனியாக பிரித்து தந்து இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் உய்குர் எனப்படும் குழுவினர் இந்த தாகுதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனான்மென் சதுக்கத்தில் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
Post a Comment