எகிப்து பாராளுமன்றத்துக்கு மே 26, 27-ல் பொதுத் தேர்தல்
முஹம்மது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்ட தற்காலிக (காபந்து) அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அவர் பதவியை ராஜினாமா செததாக அரசியல் நோக்கர்கள் கருதி வரும் வேளையில், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 20 வரை வேட்பு மனு தாக்கலும், மே 26 மற்றும் 27 தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவும் நடைபெறும். வெளிநாடுகளில் வசிக்கும் எகிப்தியர்கள் மே 15-ல் இருந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.
Post a Comment