Header Ads



இணையத்துக்கு வயது 25

சென்ற மார்ச் 12ஆம் திகதியுடன் இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளன. இணையம் என அழைக்கப்படும் World Wide Web  என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால் ஆய்வுக் கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கணினிகளை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். 

இதுவே பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது. முதலில் இந்தக் கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக்கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக இந்தத் திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன்வந்தது. 1969ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயற்படுத்தியது. அந்தத் திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்தத் திட்டம், பொது மக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயக்கும் கணினிகளையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது. இந்தவகையில் இணையம் உருவாக்கப்பட்டபோது, அப்படியே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

அதைக் காட்டிலும் அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் இணிட்ணீத குஞுணூதிஞு பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்தத் திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது. 1990ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது. ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல்கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov  என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக்காட்டாகும். 1993இல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.  பெர்னர்ஸ் செயற்படுத்திய இணையத் திட்டத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பியதை தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கணினிகளில் பதிவுசெய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவமுடியும் என்று கற்பனையாகக்கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சேர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும். இந்தக்கால கட்டத்தில் தான் பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வில் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணைய வலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற செயற்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுகமுடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும் சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது. 

No comments

Powered by Blogger.