Header Ads



கடலில் விழுந்த மலேசிய விமானம், 239 பயணிகள் மரணம் - மீட்புப் பணியில் 75 ஹெலிகாப்டர்கள்


மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் இன்று வியட்நாமின் தோ சு கடற் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு, விமானத்தில் பயணம் செய்தவர்களை மீட்பதற்காக 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.

கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட பயணிகள் விமானம் உரிய நேரத்தில் போய்ச்சரோமல் மாயமானது. இதில் இருந் 239 பயணிகள் கதி என்ன ஆனாது என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் வியட்னாம் விமான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வியட்னாம் கடற்பøடையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்று கொண்டிருந்த விமானம் மாயமானது. இந்த விமானத்தில் பயணிகள் 239 பேர் இருந்ததாகவும், அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டு்ம். ஆனால் விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. 

தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது. அவசர தொலைபேசிக்கென பொதுமக்கள் 60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சீன பயணிகள் 160 பேர் : மலேசிய விமானத்தில் 160 சீன பயணிகள் இருந்ததாகவும், ஏனையாரில் சிலர் , மலசியாவை சேர்ந்தவர்கள் என்றும், சிலர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்றும், தெரியவந்துள்ளது. இதனை சீன அரசு உறுதி செய்துள்ளது. சீனர்கள் அதிகம் இந்த விபத்தில் சிக்கி இருப்பதால் மலேசியாவில் உள்ள சீன தூதரக அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காணாமல் போன விமானம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் இறந்துள்ளதாக தெரிகிறது.இந்தியர்கள் யாரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என தெரிகிறது.

No comments

Powered by Blogger.