Header Ads



20 கோடி ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலக வீதிகள்


(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு வீதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாளை புதன் கிழமை (26.03.2014) திறந்து வைக்கவுள்ளார்.

 கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்டபட்ட பொதுமக்களினால் அதிக பாவனைக்குப் பயன்படுத்தப்படும் குறித்த நான்கு வீதிகளும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்தது. 
இது தொடர்பில், பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, மாகாண சபை உறுபப்பினரின் முயற்சியின் காரணமாக குறித்த கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி, கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதி, கல்முனைக் கடற்கரைப் பள்ளி வீதி மற்றும் கல்முனைக் கடற்கரை வீதி ஆகிய வீதிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்; உதுமாலெப்பையின் நடவடிக்கையின் பயனாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 200 மில்லியன் ரூபா செலவில் புனாநிர்மாணம் செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

 இவ்வீதிகள் திறப்பு விழா தினமான எதிர்வரும் புதன் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் வைபவங்களின்போது, 49.02. மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஸாகிறா கல்லூரி வீதி, ஸாகிறா கல்லூரி உள்ளக வடிகான் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் உத்தியோகபூர்வ காரியாலயம் மற்றும் சட்டக் காரியாலயம் என்பன திறந்து வைக்கப்படவுள்ளதுடன் மாலையில்,  37 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைக் கடற்கரைப் பள்ளிக்குச் செல்லும் வீதி, 42 மில்லியன் ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை கடற்கரை வீதி 40 மில்லியன் ரூபர் நிதியில் புனரமைக்கப்பட்ட கல்முனை முகையதீன் ஜும்ஆ பள்ளி வீதி மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள்ளக வீதிகள் என்பன திறக்கப்படவுள்ளன.

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடினின் தலைமையில் நடைபெறவுள்ள வீதிகள் திறப்பு விழா வைபவங்களில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்துகொள்வதுடன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி  அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகரின் பிரதி மேயர் மற்றும் மாகாண, மாநகர சபைகளின், கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், கல்முனைக் கல்வி வலயப் பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர்; ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்

No comments

Powered by Blogger.