2018 ஆம் ஆண்டு முதல் 0/L பரீட்சையில் ஆங்கிலப் பேச்சுத் திறன் கட்டாயம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
2018ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பேச்சுத் திறன் கட்டாயமாக்கப்படுமென பிரதிக் கல்வி அமைச்சர் மொகான் லால் கிரேரு குறிப்பிடுகிறார்.
இது குறித்து பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிடுவதாவது,
கல்வித் துறையில் ஆங்கிலமும் தொழில்நுட்பமும் முக்கியமானதொன்றாகவுள்ளன. எதிர்கால சமுதாயத்தினரின் கல்வித்துறையின் முன்னேற்றத்மிற்கு ஆங்கிலமும் தொழில்நுட்பமும் இன்றியமையாதது.
இவற்றைக்கருத்திற்கொண்டு, பாடசாலை மாணவர்களிடையே ஆங்கில மொழிப் பேச்சுத் திறனை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது,
பிரின்ஸ் ஓப் வோல்ஸ் கல்லூரியும் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியும் ஆங்கிலப் பேச்சு பாடசாலைகளாக பெயர் சூட்டப்பட்டுள்ளன.
அடுத்த வருடத்திலிருந்து தரம் 6 முதல் 8 வரையான மாணவர்களிடையே பாடசாலை மட்டத்தில் அவர்களின் ஆங்கில மொழிப் பேச்சுத்திறன் பரிசோதிக்கப்படும். அதற்காக 20 புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன், 2018ஆம் ஆண்டு முதல்; கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பரீட்சை கட்டாயமாக்கப்படவுள்ளது.
ஆங்கிலப் மொழிப் பேச்சுத் திறனானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைச் சார்ந்த மக்களுக்கு கட்டாயமானது. ஏனெனில், ஏனைய நாடுகளிலுள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளவும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஆங்கில பேச்சுத் திறன் அவசியமென அவர் தெரிவிக்கிறார்.
நமது நாட்டில் பல உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் ஆங்கில பேச்சுத் திறன் போதாமை அல்லது இல்லாமையின் காரணமாக தங்களது உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் அறிமுகப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அதனால் ஆங்கிலப் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது அதி முக்கியமென பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறாh.;
புன்னாக்கு அரசாங்கதுக்கு எதுவுமே பிந்தித்தான் பத்தும் டியூப் பல்ப் போல.இதனையே கடந்த பல வருடங்களாக சொல்லிவருகிறோம்,ஆனால் இந்த வெறும் ஆங்கிலப்பேச்சு திறன் மட்டும் உங்கள் இலக்கை அடைய வைக்க முடியாது.ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க உல்லாசப்பயணிகளின் கடற்கரை ஓரங்களில் கடலை விற்க அனுப்பினாலே போதும் பேச்சு திறன் வந்திரும்,அப்படி பலகிய பல இலங்கையர் உண்டு,ஆனால் என்ன பயன்?ஒரு வசனமும் எழுத வாசிக்க தெறியாத அவர்கள் சரளமாக ஆங்கிலத்தை பேசி என்ன பயன்?
ReplyDeleteதொழில்னுற்பத்தை கட்டாயப்படுத்தும் புன்னாக்குகள் அந்த தொழில்னுற்பத்தை படித்தறியும் வாசிப்பு,எழுத்து அறிவும் மிக அவசியம் என்பதை புறிந்துகொள்ள தவரிவிட்டது.
இதனையே,தேங்குழல் பாசைக்கு பதிலாக ஆங்கிலத்தை தேசிய மொழியாக பிரகடணப்படுத்தினால்,நாட்டில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல,சமாதான வளர்ச்சியும் மேலோங்கும்.இன்னும் 100 வருடங்கள் போனாலும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எங்களுக்கு தெறியும்.ஏனனில்,இதனால் பாதிக்கப்படப்போவது உங்கள் தேங்குழல் சமுகமே என்பதும் எங்களுக்கும் உங்களுக்கும் தெறியும்.