மௌலவி ஆசிரியர் நியமணம் 2014 - விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
தகவல் : அரச வர்தமாணி அறிவித்தல் 07-03-2014
பட்டதாரி பயிலுனர் தேரர்கள் மற்றும் ஏனைய சமய தலைவர்களை இலங்கை ஆசிரிய சேவையின் 3 -1 தரத்திற்கு சேர்த்துக்கொள்ளல் – 2014 பட்டதாரி பயிலுனர் தேரர்கள் மற்றும் ஏனைய சமய தலைவர்களை அரச நிறுவனங்களில் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக 2013.09.05 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய ''வரவுசெலவு திட்ட யோசனையை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிடல்"" வேலைத்திட்டத்திற்குரியதாக தற்போது பட்டதாரி பயிலுனர்யோசனை திட்டத்தின்கீழ் பயிற்சி பெறும்அல்லது வேலைத்திட்டத்தில்பயிற்சி பெற்றதன் பின்னர்அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நியமனம் பெற்றுள்ள பட்டதாரி பிக்குகள்ஃ பிக்குனிகள் மற்றும் ஏனைய சமய தலைவர்களின்இலங்கை ஆசிரிய சேவையில்இணைய விரும்புபவர்களை அரச பாடசாலைகளில் காணப்படும்சமய ஆசிரிய வெற்றிடங்களுக்காகப் பாடசாலையை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களாக சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்:
1.1 பதவிக்குரிய தகைமைகள்:
(i) க.பொ.த. (சா.த.) பரீட்சையில்தாய்மொழி கணிதம்உட்பட (3) திறமைச்சித்திகளுடன் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத தடவைகள்ஆறு பாடங்கள் (06) இல்சித்தியடைந்த அல்லது பரீட்சை ஆணையாளரினால் இதற்கு சமமானதாக கருதப்படும் ஏனைய தகைமைகளை பெற்றிருத்தல். முதல் சந்தர்ப்பத்தில் குறைந்த பட்சம் ஐந்து கட்டாய பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
கட்டாயப்பாடம் எனப்படுவது (i) சமயம், (ii) தாய்மொழி, ஆங்கிலம், (iஎ) கணிதம், (எ) அழகியற் கல்வி (சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம்மற்றும்நடனக்கலை (சிங்களம், தமிழ், ஆங்கிலம்,அரபு),(எi) விஞ்ஞானம்மற்றும்தொழில்நுட்பவியல், (எii) சமூகக்கல்வி மற்றும் வரலாறு, (iii) தொழில்நுட்ப பாடம் (விவசாயம், வர்த்தகம் மற்றும் கணக்கியல், கைத்தறி கைத்தொழில்), மற்றும்
(ii) க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஒரே தடவையில் குறைந்த பட்சம் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல், மற்றும்
(iii) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பல்லைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பட்டம்வழங்கும் நிறுவனமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் பட்டம் பெற்றிருத்தல்.
1.2 பொதுவான தகைமைகள்:-
1. சிறந்த பழக்க வழக்கங்கள் மற்றும்
2. தேக ஆரோக்கியம் கொண்டவராக இருத்தல் வேண்டும்@
3. விண்ணப்பப்படிவம்கோரும் 2014.03.21 ஆந்திகதி அன்று 21 வயதை விட குறையாதவராகவும் மற்றும் 45 வயதை விட மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. 2011.12.07 ஆந்திகதிய அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 11, 2260, 504, 179-1 வரவு செலவுத்திட்ட யோசனையை வினைத்திறனுடன அமுல் படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை திட்டமிடல் என்ற தொனிப் பொருளில் அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அமைய அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைய பட்டதாரி பயிலுனராக சேர்த்துக் கொள்ளப்பட்ட தேரர்கள் பிக்குணிகள் ஏனைய சமய தலைவர்கள் அருட்சகோதரியாக இருக்க வேண்டும். இலங்கைப்பிரசையாக இருக்க வேண்டும்
2. ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் சேவை நிபந்தனைகள்:
2.1 2.1 இவ்வறிவுறுத்தல் களுக்குரியதாக விண்ணப்பம் கோரப்பட்ட விண்ணப்பதாரர்களை சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நியமனப் பொறுப்பாளரினால் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடாத்தி காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தகைமை கொண்டோர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையற்ற விண்ணப்பதாரிகள் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட மாட்டார்கள்.
2.2 2.2 தகைமைகளை பூரணப்படுத்தப்பட்ட பாடத்திற்குரியதாக நியமனம் பெற விரும்பும் வதியும சமய ஸ்தலத்திற்கு அருகாமையில் உள்ள ஐந்து பாடசாலைகளை தொடராக பெயரிட்டு நேர்முகப் பரீட்சையில் தகைமைபெறும் நியமனதாரர்களுக்கு தேசிய பாடசாலைக்கு மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடங்கள் கொண்ட பெயர்பட்டியலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பு:
அவ்வவ்பாடங்களுக்கு அமைய விண்ணப்பதாரர்களினால் பெயரிடப்பட்ட விருப்பத்தொடருக்கு அமைய முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் பாடசாலையில்காணப்படும் பாடத்துக்கு உரியதான வெற்றிட எண்ணிக்கையை விட விருப்ப தொடர்கள் காணப்படும் வேளையில் கட்டமைக்கப்பட் நேர்முகப்பரீட்சையில் பெறும்புள்ளி அளவிற்கு அமைய முன்னுரிமை வழங்கப்படும்.ஒரு பாடசாலையை கோரியுள்ள விண்ணப்பதாரிகளில் பலர் சமமான புள்ளிகளைப் பெற்றுள்ள வேளையில் பாடசாலைக்குரிய தூர அளவிற்கு அமைய முன்னுரிமை வழங்கப்படும். இத்தீர்மானத் திற்கு அமைய தகைமைபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2. 2.3 மகளிர் கல்லூரிகளுக்காக பிக்குனிகள் மற்றும் அருட் சகோதரிகள் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
2.4 அரச நியமனத்தினை கட்டுப்படுத்து பொது நிபந்தனைகளுக்கும் இலங்கை ஆசிரிய சேவை பிரமாதனக் குறிப்பின் மூலம் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும் அப்பிரமானக் குறிப்பினால் மேற ;கொள்ளப்பட்டுள்ள மற்றும் இதற்கு பின்னர் விதிக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு உட்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1. தரத்துக் சேர்த்துக் கொள்ளப்படுவர் இப்பதவிக்குரிய மாதாந்த சம்பள அளவு 2007.08.24 ஆந் திகதி பொது நிர்வாக சுற்றிக்கை இலக்கம் 6ஃ 2006 (iஎ) இற்கமைய இந்நியமனத்துக்குரிய சம்பள குறியீட்டு இலக்கம் வுளு -1- 2006யு கொண்ட சம்பள அளவு (மாதாந்தம் ரூபா 14,135 - 180 x 9 - 240 x 6 - 330 x 5 - 400 x 7 - 645 x 13 ஆகும். தாங்கள் இச்சம்பள அளவில் 8 ஆம் கட்டமான ரூபா 15,395 மாதாந்த சம்பள அளவில நிலைப்படுத்தப்படுவீர்கள்.
2.5 இந்நியமனம் நிரந்தரமானது: ஓய்வுதிய சம்பளம் கொண்டது.
2.6 பதவி உயர்வு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின ஒழுங்கு விதி முறைக்கு அமைய கட்டுப்பட்டிருக்கும்.
2. 2.7 இந்நியமனம் இலங்கை ஆசிரியர் சேவையில்இடமாற்றம் ஒழுங்குவிதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும்.
3. விண்ணப்பிக்கும் முறை :
3.1 விண்ணப்பப்படிவம் இவ்வறிவுறுத்தலில் குறிப்பிடப்பட் டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்துக்கு அமைவாக இருக்க வேண்டியதுடன்யு 4 அளவு கடதாசியின் இரு
பக்கங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பரீட்சார்த்தி பூர்த்தி செய்ய வேண்டும்.
3.2 சரியாக பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் 2014.03.21 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ''செயலாளர், கல்வி அமைச்சு, 'இசுருபாய", பத்தரமுல்லை"" என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப்படிவத்தை இட்டு அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில்''பட்டதாரி பயிலுனர் பிக்கு மற்றும ;ஏனைய சமய தலைவரை இலங்கை ஆசிரிய சேவையின் 3 - 1 தரத்திற்கு சேர்த்துக் கொள்ளல்"" என கட்டயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
4. விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டாது. தபாலில் காணாமல் போகும் விண்ணப்பப்படிவம் தொடர்பில் அமைச்சினால் பொறுப்பு கூறப்படமாட்டாது.
5. உரிய தினத்திற்கு பின்னர்கிடைக்கும் விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
6.இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவத்துக்கு ஒவ்வாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.
7. இவ்விண்ணப்பப்படிவத்தின் இல. 6 இன் கீழ் தற்போது இணைப்பு செய்யப்பட்டுள்ள சேவை இடத்தில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் அல்லது தாபன பொறுப்பாளரினால் சான்றுப்படுத்தப்பட்டு விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டயமாகும்.
8.அவ்வறிவித்தலில் தழுவப்படாத ஏதேனும் ஒரு விடயம் இருப்பின் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமையும், வெற்றிடங்களில் ஒரு பகுதியை அல்லது முழுமையாக நிரப்புதல் அல்லது நிரப்பாமல் இருப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் உரிமை கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரியதாகும்.
அட்டவணை இல. 1
கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையில் புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் ஒழுங்கு விதிமுறைகள் மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கை 50 ஆகும். கற்பிக்கும் திறமைகளுக்காக 50 புள்ளிகள் உரித்தாகும். (நியமனம் பெறும் விடயத்திற்கமைய
நேர்முகப்பரீட்சை சபையினால் வழங்கப்படும 5 நிமிட தொனிப் பொருளில் விளக்கங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
அனுர திசாநாயக,
செயலாளர்,
கல்வி அமைச்சு.
கல்வி அமைச்சு,
'இசுருபாய",
பெலவத்தை,
பத்தரமுல்லை, 2014, மார்ச்சு 7.
Post a Comment