Header Ads



கல்முனை ஸாஹிரா கிண்ணம் 2014


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி விளையாட்டு குழு ஒழுங்கு செய்திருந்த உயர்தர வகுப்பு பிரிவுகளுக்கிடையிலான 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட” ஸாஹிரா கிண்ணம் 2014 ”  மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி  அண்மையில் ஆரம்பமானது.

கல்லூரியின் ஒழுக்காற்று சபைத் தலைவர் எம்.எஸ்.எம்.நுபைஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் விளையாட்டுக் குழு உறுப்பினர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஏ.ஆர்.எம்.யுசுப் , யு.எல்.எம்.இப்றாஹிம் , எம்.ஏ.சலாம் , கே.எம்.தமீம் , எம்.எப்.எம்.ஆர்.ஹாத்திம் , ஐ.எம்.உவைஸ் , எம்.ஐ.எம்.பஸீல் , ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் போது ” ஸாஹிரா கிண்ணம் 2014 ” அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. 

முதல் போட்டியாக உயர்தர விஞ்ஞான முதலாம் வருட மாணவர்களுக்கும் உயர்தர முதலாம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போது உயர்தர வர்த்தக பிரிவு 10 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய உயர்தர விஞ்ஞான அணி 8 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வர்த்தக பிரிவு அணியினர் 5 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்று இலகுவான வெற்றியினை பெற்றுக் கொண்டனர்.

இரண்டாவது போட்டியில் கலைப்பிரிவை எதிர்த்து தொழில்நுட்பப் பிரிவு போட்டியில் ஈடுபட்டபோது முதலில் துடுப்பெடுத்தாடிய கலைப்பிரிவு 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தொழில் நுட்ப அணியினர் 8 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 30 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

கல்லூரியின் வர்த்தக பிரிவு அணியும் , கலைப்பிரிவும்  கால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன

No comments

Powered by Blogger.