19 இலட்சத்து 76 ஆயிரத்து 816 பேர் வாக்களிக்கத் தவறினர் - 1 இலட்சத்து 61 ஆயிரத்து 11 வாக்குகள் நிராகரிப்பு
(ஏ.எல்.ஜுனைதீன்)
மேல் மற்றும் தென் மாகாண சபைக்காக 29 ஆம் ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 19 இலட்சத்து 76 ஆயிரத்து 816 பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். இது மொத்த வாக்காளர்களில் 33 சத வீதத்துக்கும் கூடுதலாகும்.
மேல் மாகாணத்தில் 13 இலட்சத்து 55 ஆயிரத்து 308 பேரும்
தென் மாகாணத்தில் 6 இலட்சத்து 21 ஆயிரத்து 508 பேரும்
வாக்களிக்கத் தவறியிருக்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் 5 இலட்சத்து 31 ஆயிரத்து 546 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 411 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 351 பேரும்
காலி மாவட்டத்தில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 857 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 384 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 716 பேரும் வாகாளிக்க தவறியுள்ளனர்.
நடைபெற்று முடிந்த இரண்டு மாகாண சபைத் தேர்தலிலும் வாக்களித்தவர்களில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 11 பேர் அளித்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் வாக்களித்தவர்களின் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 285 வாக்குகளும் தென் மாகாணத்தில் வாக்களித்தவர்களின் 47 ஆயிரத்து 726 வாக்குகளும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் 43 ஆயிரத்து 762 வாக்குகளும் கம்பஹா மாவட்டத்தில் 40 ஆயிரத்து 713 வாக்குகளும் களுத்துறை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 810 வாக்குகளும்
காலி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 135 வாக்குகளும் மாத்தறை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 712 வாக்குகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 879 வாக்குகளும் வாக்காளர்கள் வாக்களித்ததில் ஏற்பட்ட தவறுகளினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
Post a Comment