Header Ads



மட்டக்களப்பில் இவ்வருடம் 1548 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி திட்டங்கள்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடம் சுமார் 1548 மில்லியன் ரூபாவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தி நிதி ஒதுக்கீட்டிலான வேளைத்திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்வைக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி திட்டத்தில் இம் மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வேலைவாய்ப்பற்றோரின் பிரச்சினைகளை தீர்க்க இளைஞர்களுக்கு நவீன விஷேட தொழினுட்ப முறையிலான பயிற்சிகள் வழங்குதல்  திவி நெகும வாழ்வின் எழுச்சி திட்டத்தை பலப்படுத்துதல் பாடசாலை கிராம சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ,மற்றும் விவசாய ,மீன்பிடி கால் நடை உற்பத்தி அபிவிருத்திற்கும் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.