Header Ads



பரீட்சை விண்ணப்பங்களை 14 இற்கு முன் அனுப்புங்கள்..!


இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள  ஜி.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும்  14 ஆம் திகதி என்று  பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது பாட எண், நகர எண் என்பனவற்றை பிழையின்றி குறிப்பிடுதல் வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட பாட எண்ணையோ, நகர எண்ணையோ பின்பு மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பரீட்சை ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சை நிலையத்தையோ, விண்ணப்பித்த பாடங்களையோ, விண்ணப்பித்த மொழியையோ பின்னர் மாற்றம் செய்ய முடியாது என்று அவர் கூறினார். எனவே விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

குறித்த திகதிக்குப் பின்னர் அல்லது சரியாகப் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.