அக்கரைப்பற்றில் நாளை தேசிய காங்கிரஸின் 10 ஆவது வருடாந்த பேராளர் மாநாடு
(ஜே.எம். வஸீர்)
தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் 2004 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் என்ற பெயருடன் குதிரைச் சின்னத்தில் இக்கட்சி அரசியல் உலகிற்கு அறிமுகமானது.
தேசிய காங்கிரஸ் அதன் 10வது வருடாந்த பேராளர் மாநாட்டை இன்று (2014-03-30)ஆம் திகதி முற்பகல். 10.00 மணிக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தரும் ஆயிரக்கணக்கான பேராளர்களின் பங்குபற்றுதலுடன் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
தேசிய காங்கிரஸ் இன்று தனது 10 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் பெற்ற வெற்றிகள் ஏராளம். மிகவும் சவால்மிக்க கால கட்டத்திலும் அவைகளைத் தகர்த்தெறிந்து எவருக்கும் அஞ்சாமல் சரியான நேரத்திலும் சரியான இடத்திலும் தனது கருத்துக்களை வெளியிட்ட கட்சியாக தேசிய காங்கிரஸ் கடந்த காலங்களில் விளங்கியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தேசிய காங்கிரஸ் ஒரு குறுகிய 10 வருட காலங்களுக்குள் மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்ததற்கான வெளிப்பாடு இன்று பாராளுமன்றத்தில் கட்சியின் தலைமை ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், கிழக்கு மாகாண சபையில் 1 அமைச்சர் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் தேசிய காங்கிரஸ் கொண்டுள்ளது. அதுமாத்திரமன்றி தனது கட்சியின் சின்னமான குதிரைச் சின்னத்தில் சென்ற உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மாநகர சபை ஒன்றினையும், பிரதேச சபை ஒன்றினையும் நிருவகிப்பதுடன் நாமலோயா பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் சார்பில் ஒரு தவிசாளரையும் அம்பாரை நகர சபை, மகாஓயா பிரதேச சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபைகளிலும் 04 அங்கத்தவர்கள் தேசிய காங்கிரஸ் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். மேலும் இலங்கை பூராக மொத்தமாக 27 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, தனது 10 வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் தேசிய காங்கிரஸின் பயணம் வெற்றிபெற பிரார்த்திப்போம்.
எ எல் எம் அதாஉல்லா சார் நிங்கல்லாம் கட்சி ஆரம்பிச்சி போராளர் மாநாடு நடாத்தல்லை என்று யாரு சார் கவலைபட்ட ! தோசிய காங்கிரஸ் இன்று 10 வயதில் காலடி வைகல்லாம் இன்னுமொன்று 10 வயது வரபோகுது யாபகம் இருக்கா சார் உலகம் மறாக்கல்ளாம் ஆனால் அம்பாறைமாவட்ம் மறவாது சுனாமி சார் முதல் இந்த விழாவால்லாம் கொன்டறதுக்கு கரண்னமான உங்க ஊர் மக்கள் ! அந்த மக்களின் நுரைச்சோலை சுனாமி விட்டுத்திட்டத்தை அக்ரைப்பற்று மக்களுக்கு கைய்யாலியுங்கள் அக்ரைப்பற்று உங்க குகை என்று மர்தட்டுரிங்க அந்த மக்களுகாக இத செய்யாமடிங்கள்ள ? உங்கள் அரசியல் அசைக்க மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் கஷ்டங்களும் பயன்படுத்தாதிங்க நிங்களும் அல்லாஹவிடத்தில் பதில் சொள்ளவோண்டும் பிளிஸ் சார் மருமைக்கவும் கொஞ்சம் உழைங்க சார்
ReplyDeletedon't say whole sri lanka. only few places in eastern province.
ReplyDelete