Header Ads



துருக்கியில் மினி பஸ் மீது மோதிய ரெயில் - 10 பேர் மரணம்

துருக்கியில் 20-032014 பயணிகள் ரெயில், மினி பேருந்தின் மீது மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மத்திய தரைக்கடல் கரையில் உள்ள மெர்சின் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது, அதானா நகரில் இருந்து மெர்சின் நோக்கி சென்ற ரெயில் பயங்கரமாக மோதியது. 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மினி பேருந்து டிரைவரின் கவனக்குறைவால் நடந்த இந்த விபத்தில், 10 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

துருக்கியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் அபாயகரமான சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.