Header Ads



கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழாவும் , மீலாதுன் நபி ( ஸல்) சிறப்பு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுருதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்  எம்.எச்.எம்.ஸமீல் , ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.பீ.எச்.முஹம்மட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

சங்க உறுப்பினர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் , பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.



1 comment:

  1. சங்கத்தின் பெயர் "இஸ்லாமிய சமூக சங்கம்", எடுக்கப்பட்ட விழாவோ, மீலாதுன் நபி (ஸல்) விழா... ஒன்றுக்கொன்று முரண்பாடு....

    ReplyDelete

Powered by Blogger.