சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஜனாதிபதியை கொண்டுசெல்ல முடியாது - JVP
நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் இணக்கபாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இலங்கை அதில் கையெழுத்திடவில்லை என்பதால், அப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது.
இதனால் ஜனாதிபதியை மாத்திரமல்ல சாதாரண இராணுவ வீரரையும் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment