நிந்தவூரில் IT பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(சுலைமான் றாபி)
மூன்றாம் நிலைக் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிந்தவூரில் சிறப்பாக இயங்கி வரும் IT Campus நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் கோட்டக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் இன்று (02.02.2014) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
IT Campus நிறுவனத்தின் பணிப்பாளர் U முஜிபுர் ரஹுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் AM ஜாபிர், சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் M அசீஸ், NAITA நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் A மன்சூர், ஓட்டமாவடி பாத்திமா அறபுக் கல்லூரியின் அதிபர் M மஹ்மூத், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் மற்றும் முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் அஷ்-ஷேஹ் நஜாத் முஹமட் மற்றும் கல்வி பயின்ற மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை இந்த பயிற்சி நெறியில் பொலன்னறுவை முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களில் இருந்து 195 மாணவ மாணவியர்கள் இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளனர். இந்நிகழ்வில் இவர்களுக்கு NVQ விற்கு ஒப்பீடான சான்றிதழும், தொழில் வழிகாட்டல் சம்பந்தமான ஆலோசனைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment