Header Ads



இனவாதத்தை தூண்ட நினைக்கும் கல்முனை மாநகர தமிழ் அரசியல் வாதிகள்..!

(முஹம்மது காமில்)

வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை பிரதேசமானது கிழக்கிலங்கையின் தலை நகராக முக வெத்திலையாக வர்ணிக்கப்படும் ஒரு பிரதேசமாகும். இங்கு கிட்டத்தட்ட 75 வீதம் பெரும்பான்மையாக இனமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகின்ற போதிலும்  இனரீதியாக பாகுபாடில்லாமல் முஸ்லிம்,தமிழ்,கிறிஸ்தவ,பௌத்த இன மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்கால சம்பவங்கள் மற்றும் பிரதேச தமிழ் அரசியல் வாதிகளின் இனவாத விசம கருத்துக்கள்  இனங்களை குழப்பி விடக்கூடிய சதியாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது அதே நேரம் இதன் பின்னணியில் வலுவானதொரு சக்தி இருப்பதாக இப் பிரதேசவாழ் மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது.
காரணம் கடந்த மாத கல்முனை மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடலின் போது, கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் வீதி என்று வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி  என பெயர் மாற்றம் செய்து வர்த்தமானி பிரகடனம் செய்யும் முக்கிய பிரேரணையை கல்முனை மாநகர மேயரும் சட்ட முதுமானியுமான நிசாம் காரியப்பர் முன்வைத்தார். இந்த பிரேரணையை, பிரதி மேயர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எதிர்கட்சி உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் ஆதரித்தனர். ஆனால் எதிர் கட்சியில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் இதனை எதிர்த்தனர். இவர்கள் இந்த பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்த ஒரு வலுவான காரணமும் இல்லை. வெறுமனே இனவாத விசம கருத்துக்களை மக்கள் முன் கொண்டுசென்று மக்களை திசை திருப்பி பகையாளிகள் ஆக மாற்றுவதும் அதன் மூலம் அரசியல் வியாபாரம் செய்வதுமே இவர்களது நோக்கமாகும்.

இந்தப் பிரேரனையின் உண்மை அர்த்தத்தை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில்  தரவைப் பிள்ளையார் கோவில் வீதி என்று அழைக்கப்படும் கடற்கரைப் பள்ளிவாசல் வீதியானது வரலாற்று சிறப்புமிக்க வீதியாகும் கல்முனையின் புகழ் உலகமெங்கும் பரவுவதற்கும் இந்த வீதியின் இறுதியில் அமைந்திருக்கும் கல்முனை கடற்க்கரைப்பள்ளிவாசலும் ஒரு பிரதான காரணமாகும் அதே நேரம்  வீதியின் இருமருங்கிலும் நூறு வீதம் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன் காரணத்தால் தமக்கு பொருத்தமில்லாத பெயர் கொண்டு அழைக்கப்படும் இவ் வீதியின் பெயரை மாற்றுவது சிறந்தது என்று அந்த வீதியில் வசிக்கும் மக்கள் எண்ணுகின்றனர். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஒரு வீதியின் பெயரை மாற்றுவாதால் என்ன நடந்துவிடப்போகின்றது. இதற்க்கு இனவாத சாயம் பூச நினைப்பது எந்தவகையில் நியாயமாகும். தங்களுக்கு பிடிக்காவிட்டால் பெயரை  மாற்றிக்கொள்ள கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் அதே போல்தான் இதுவும். தாங்கள் வசிக்கும் வீதியின் பெயர் தங்களுக்கு பொருத்தமில்லை எனில் அதை மாற்றிக்கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிமை உண்டு அதற்க்கு  இனவாதம் எனும் சாயம் பூச நினைப்பது மகா தவறு அவ் வீதியில் வசிக்கும் மக்கள் இவ் விடயத்தை கல்முனையின் புதிய மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் மூலம்தான் மாநகர மேயர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார்.
இந் நிலையில், இதற்குமுன்னர்  பலவருடங்களாக தபால்  தொலைத்தொடர்புகள் மற்றும் ஏனைய நடைமுறைகளில்  கல்முனை கடற்கரை பள்ளி வீதி என்ற பெயரே வழக்கத்தில் இருந்து வருகின்றமை இவ் விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும் இருந்தபோதிலும் இவ் வீதியில் செறிந்து வாழும் மக்களின் அபிலாசையான தமது வீதியின் பெயரை வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாற்றி அமைக்க வேண்டுமென்பதே இந் நடவடிக்கை  எந்த வகையில் தவறாகும்.

இப் பெயர் மாற்றமானது எவ் வகையில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை சீர் குலைக்கும்..? யாரும் சிந்தித்து பார்த்ததுண்டா? ஆனால் அரசியல் வியாபாரம் செய்யும் சகுனிகளின்  விசமத்தனமான கருத்துக்களை மக்கள் முன் திணிப்பதால் மக்கள் பிழையாக வழிநடத்தப்படக்கூடிய வாய்ப்பை உருவாக்குவதுதான் இந்த அரசியல் சகுனிகளின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இவர்கள் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கின்றனர் அதன் வெளிப்பாடுதான் இவ்வாறான பிரச்சினைகளின் ஆரம்பம் இவ் விசம கருத்துக்களை பரப்பும் இவர்கள் தங்களது சமூகத்துக்காக இதுவரைக்கும் செய்த செய்து கொண்டிருக்கின்ற சேவை என்ன துவேச கருத்துகளை நிலைநிறுத்தி பதவிகளை அடைந்து சுகபோகம் அடைந்ததுதான் எமது தமிழ் சமூகம் கண்டபயன் இதுவரையில் எந்த ஒரு சிறிய அபிவிருத்தியேனும் இவர்களால் அடைந்ததில்லை என்பது திண்ணமே..!

இலங்கை ஒரு சுத்தந்திர தேசம். தனது 66வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் தருவாயில் நாம் அதவாது குறிப்பாக முஸ்லிம் சமூகம் எமது இலங்கை திரு நாட்டில் அந்த சுதந்திர காற்றை அனுபவித்தது குறைவு பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் எம்சமூகம் பல  இன்னல்களையும் சொல்லொண்ணா துயரங்களையும்  அனுபவித்துள்ளது அனுபவித்துக்கொண்டு வருகின்றது யாவரும் அறிந்ததே குறிப்பாக பௌத்த பேரினவாதிகளாலும் ஏனைய சில இனவாதிகளாலும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றோம்.

குழப்பத்தையும் இனவாதத்தையும் தூண்டும் கல்முனை பிரதேச தமிழ் அரசியல் வாதிகள் என்றாவது தாங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு செய்த கொடுமைகளை சற்று சிந்தித்து பார்த்ததுண்டா? இருந்தபோதும் நாம் அவர்களை அனுசரித்தே பயணிக்கின்றோம் ஏன் எமது அரசியல் தலைமைகள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பல்வேறு வகையில் அதன் செயர்ப்படுகளுக்கு உதவியாகத்தான் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த காலங்களில் தமிழ் ஆயுத போராட்ட குழுக்கள் மூலம் எமது முஸ்லிம் சமூகம் அடைந்த கொடுமைகள் இழப்புகள் எத்தனை எத்தனையோ. இரத்த வரலாறுகள் என்றும் ஏன் இன்றும் கூட எம் மனங்களை விட்டு அகலாமல் இருக்கின்றன இதற்க்கு பல்வேறு சாட்சிகளும் உதாரணங்களும் உள்ளன குறிப்பிட்டு சொல்லுவோமானால்  தமிழ் பயங்கரவாதம் மூலம் ஏறாவூர், காத்தான்குடிபள்ளிவாசல் படுகொலை , அழிஞ்சிப் பொத்தானை, பங்குராணை,மூதூர்,வடகிழக்கு என்று பல பிரதேசங்களில் நடைபெற்ற இன அழிவுகளும் பொருளாதார இழப்புக்களும் இருக்கின்றன.
 
அதே நேரம் 1990 களின் முற்பகுதில் யாழ்பாணத்தில் இரவோடிரவாக துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்றும் கூட அனாதைகளாக எமது நாட்டின் பலபாகங்களிலும் நிரந்தர வதிவிடமில்லாமல் தங்களது அடையாளங்களை இழந்து அனாதரவான சூழ் நிலையில் பல்வேறுபட்ட இன்னல்களை இன்னும் அனுபவித்துக்கொண்டுதான்  வாழ்கின்றனர் அது இவர்களுக்கு மறந்து கூட இருக்கலாம் அதே நேரம்  எமது பாரம்பரியம், அடையாளம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் முற்றாக அழித்தொழிக்கப்பட்டன இருந்தும் முஸ்லிம்கள் இன்றுவரை பொறுமையுடந்தான் இருந்துவருகின்றனர். இப்படி இருந்தும் கடைசியில் என்ன நடந்தது சிந்திக்க வேண்டாமா ?எமது சமூகத்தை ஈவு இரக்கமின்றி அழித்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே? இதற்க்கு வரலாறுகள் சாட்சி பகிரும்.
 
கடந்த ஒரு சிலமாதங்களுக்கு முன்னர் பௌத்த பேரினவாதத்தை தூண்டும் அமைப்பான போது பல சேனாவை கல்முனை மாநகருக்குள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைத்ததும் இது போன்ற விசமிகளின் செயர்ப்பாடே.இன் நிலையில் இவ் விசமிகளுக்கு ஆதரவாக கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் களமிறங்கி இருப்பது நகைப்புக்குரிய விடயமும் சிந்திக்க வேண்டிய விடயமுமாகும்.எதிரிக்கு எதிரி நண்பன் போல இன்று இவரின் செயற்ப்பாடு பிரமிக்க தக்கவையாக இருக்கின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கபட்டு வருகின்ற தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாத இவர் இந்த சின்ன ஒரு விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டு இவர்களது உரிமை என்றும் அடையாளம் என்றும் கூறுவதன் உள் அர்த்தம் என்னவோ? தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்டு நடைபெறும் சிங்கள பேரினவாத குடியமர்த்தல்கள் நிலச்சுவீகரிப்புக்கு எதிராக பேச முடியாதவர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வீதியின் பெயரை மாற்றுவதற்கும் மற்றும் கல்முனை வடக்கு  தமிழ் பிரதேச செயலகத்துக்கு அங்கீகாரம்  வழங்க வேண்டுமென்று கூறுவது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தான். இரண்டு இனங்களை பகை மூட்டிவிட்டு குளிர்காய நினைக்கின்றாரோ என்னவோ சோழியன் குடுமி ஒரு போதும் சும்மா ஆடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுவோம்.

பொதுமக்களே சற்று சிந்தியுங்கள்..!

இன்றைய நிலையில் எமது நாடு பொருளாதாரத்தில் பின்னடைந்து பாரிய அழிவை நோக்கி செல்லுகின்றது அப்பாவி பொதுமக்கள் அன்றாட ஜீவனோபாய தேவைகளை நிபர்த்தி செய்வதற்கே முடியாத நிலையில் காலத்தை கடத்திக்கொண்டு வருகின்றனர் விலைவாசி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிகரித்து செல்லுகின்றது இந்த நிலையில் அதை எப்படி சமாளிக்கலாம் என்று மக்கள் திண்டாடும் சமயத்தில் இது ஒரு தேவை இல்லாத விடயம்.

வீதியின் பெயரை மாற்றுவது ஒன்றும் பெரிய குற்றமல்ல இதை திரிவு படுத்தி இனத்துவேச கருத்துக்களை மக்கள் முன் விதைத்து பிரச்சினைகளை உண்டு பண்ணுவதே பெரும் குற்றம் பெயரை மாற்றுவாதால் வரலாறு மற்றும் பூர்வீகம் ஒரு போதும் மாறிவிடாது அப்படி என்றால் எமது நாட்டுக்கு இலங்கை என்ற பெயர் வந்திராது காலத்துக்கு காலம் நமக்கு ஏற்றவாறு அடையாளத்தை மாற்றுவதில் எவ்வித குழப்பமும் இல்லை வீதியில் வசிக்கும்  பெரும்பான்மை மக்களின் விருப்பம் பெயர் மாற்றுவது என்பது அப்படி மாற்றுவதன் மூலம் எந்த ஒரு பழிவாங்கல்களும் நடந்துவிடப்போவதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நமது வசதிக்காகத்தான் எல்லாம்.

வீணான விசமிகளின் நயவஞ்சக செயர்ப்பாடுகளுக்கு இணங்கி எமது சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முன் நிற்கவேண்டாம்.

எல்லாம் வல்ல இறைவன் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அவன் அறியாமல் எதுவும் நடந்துவிடாது என்பது மிக உறுதி...!

எல்லாம் இறைவா எமது சமூகத்தை பிளவுபடுத்திப்பார்க்க நினைக்கும் சூழ்ச்சிக்காரகளிடமிருந்து எமது சமூகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக...!!

ஆமீன்...! அல்ஹம்துலில்லாஹ் – புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.

1 comment:

  1. அப்போ நீங்கள் சொல்வதை பார்த்தல் பௌத்தர்கள் பள்ளியை உடைப்பது சரி என கூறுகிறீர்களா

    நீங்க எல்லாரும் கட்டியா வீதியின் இரு மருங்கிலும் இருந்தா உடனே பெயர் மாத்தணும்

    ஆகவே பௌத்தர்கள் செறிந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளி வாசல் இருக்க கூடாது என்று கோருவதில் நியாயம் உண்டு தானே இதனை எஅட்கிரீர்கல

    neethamaaka சிந்திக்க பழகுங்கள் காமில்

    உங்களுக்கு ஒரு நீதி மற்று இனத்தவருக்கு ஒரு நீதி

    பள்ளி வாசல் எப்பிடி வீதியின் தொங்கல்ல இருக்கோ அதே போல் வீதியின் முகத்துல அவங்கட கோவில் இருக்கு

    நியாயமா பாத்தா முகம் முக்கியமா தொங்கல் முக்கியமா

    இதுவெல்லாம் இனவாதத்தை விதைத்து அரசியல் செய்யவந்த காரியப்பெரின் சிறுபிள்ளைதனமான செயல்

    செய்யவேண்டிய காரியம் அபீவிருத்தி எவளவோ இரிக்கி

    அத விட்டுபோட்டு பிரயோசனம் இல்லாத ஒண்ட புடிச்சிக்கிட்டு டைம் வேஸ்ட் பண்றோம் நம்ம எல்லாரும்

    இந்த வீதிக்கு பெயர் மாத்தாட்டி நம்மட ஒண்டும் குறைய போறல்ல

    ReplyDelete

Powered by Blogger.