முஸ்லிம் அமைச்சர்கள் ஜால்ரா அடித்துக்கொண்டிருப்பது இருப்பது மிகக்கேவலமான நிலையாகும்
வெளிநாட்டு தலையீடு என்பது இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என கூறிக்கொண்டே இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தாமும் சர்வதேசத்தின் முன் வைப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறுவது முரண்பாடானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவியை சந்தித்த போது வெளிpநாட்டு தலையீடு பிரச்சினையை அதிகரிக்கும் என ஹக்கீம் கூறியுள்ளார். அதே வேளை தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரின் கருத்துக்கு பதில் தரும் போது முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் தாக்குதல்கள் பற்றிய விபரங்களை தமது கட்சியும் சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.
இத்தகைய இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் மூலம் ரஊப் ஹக்கீம், அரசாங்கத்தையும் முஸ்லிம்களையும் சமாளித்துக்கொண்டு தமது பதவியை காக்க முற்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இன்று தமிழ் மக்கள் தமக்கான தீர்வை இந்த நாட்டில் பெறமுடியாது என்பதை உணர்ந்த பின்னரே தமது பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் பூரண விசுவாசமாக இருந்தும் முஸ்லிம்களின் 27 பள்ளிகளுக்கு மேல் தாக்கப்பட்டுள்ளன. ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட்டது. பள்ளிவாயல் கட்டுவதாயின் புத்த சாசன அமைச்சின் கால்களில் விழ வேண்டுமென்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடையாள அட்டையில் முஸ்லிம்கள் தமது காலாசார ஆடைகளை அணிய முடியாது எனும் சட்டம் என பல அநியியாங்களை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் போது முஸ்லிம் கட்சித்தலைவர்களும், அவர்களின் உறுப்பினர்களும் இவை எதனையும் தடுத்து நிறுத்த முடியாத கையாலாகாதவர்களாய் இருந்து கொண்டு தமது பதவிகளை காப்பதற்காக சர்வதேசத்தை நாம் நாட முடியாது என புத்திமதி கூறிக்கொண்டிருப்பது அப்பட்டமான சுயநலனாகும்.
ஒரு சமூகம் உள்நாட்டில் பிரச்சினைகளை எதிர் நோக்கும் போது உள்நாட்டில் அதற்கான தீர்வை தேடும். ஆனால் பிரச்சினையை ஏற்படுத்துபவர்களே ஆட்சியாளர்களாக இருந்தால் எங்கே போய் தீர்வைத் தேடுவது என்று கூட புரியாதவர்களாய் நமது முஸ்லிம் அமைச்சர்கள் ஜால்ரா அடித்துக்கொண்டிருப்பது இருப்பது சமூகத்தின் மிகக்கேவலமான நிலையாகும்.
ஆகவே முஸ்லிம் அமைச்சர்களின் தலைமைகளிலான கட்சிகள் முஸ்லிம்கள் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேசத்தை நாடாத போதும் தமிழ் மக்கள் தமக்கான வெளிநாட்டு தீர்வை எதிர் பார்ப்பதை தயவு செய்து அரச கடைக்கண் பார்வைக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
Excellent mr.Mubarak. Although we read these news, we coul not analyse this fact.Thank you for this, and this has to be worked out to make Raw Hakeem defeat in the coming elections.
ReplyDelete